MK Stalin [image source : Twitter/@arivalayam]
பருத்தி, நூல் உயர்வை கட்டுப்படுத்த கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.
தமிழ்நாட்டில் பருத்தி, நூல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். பருத்தி, நூல் விலை உயர்வால் ஜவுளி தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நீக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறக்குமதி வரி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும். நூற்பாலை துறையில் மீண்டும் வேலைவாய்ப்பை கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நூற்பாலை சங்கம் உற்பத்தி நிறுத்தத்தை அறிவிக்கும் அளவுக்கு விலை உயர்வு கடும் நெருக்கடியை அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 1,500 நூற்பாலைகளில் 15 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நூல் விலை உயர்வால் செலவு அதிகரித்து உற்பத்தியை நிறுத்தும் நிலைக்கு நூற்பாலைகள் தள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து கழிவு பருத்தி ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும் என்றும் நூற்பாலைகளுக்கு பருத்தி கொள்முதல் கடன் வரம்பை 3ல் இருந்து 8 மாதங்களாக நீட்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், கடன் பெற வங்கிகள் கோரும் விளிம்பு தொகையை 25%-ல் இருந்து 10%-ஆக குறைக்கவும், அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் நூற்பாலைகளுக்கு நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…