[Image source : EPS]
விபத்தில் சிக்கிய உடல்களை அடையாளம் கான சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்டுகிறது என தமிழக பேரிடர் மேலாண்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி இதுவரை 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாகவும், 900க்கும் அதிகமானோர் விபத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நிறைவு பெற்றதாகவும், தற்போது ரயில்வே சீரமைப்பு பணிகள் பாதுகாப்பு படையினர் மற்றும் மீட்புப்படையினர் உதவியுடன் நடைபெற்று வருகிறது.
இந்த சீரமைப்பு பணிகளின் போது உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் எனவும், இடிபாடுகளில் சிக்கி அடையாளம் தெரியாத வகையில் உடல்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 30க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த விபத்து குறித்து தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் கூறுகையில், அடையாளம் காணப்பட்ட சடலங்களில் இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த எவரும் இருப்பதாக எங்களுக்கு எந்த தகவலும் அதிகாரபூர்வமாக கிடைக்கவில்லை என தெரிவித்தார்.
மேலும், அடையாளம் தெரியாத வகையில் ஏராளமான சடலங்கள் உள்ளன எனவும், இதற்காக சென்னையில் இருந்து மாலையில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்றும்,,அதில் விபத்தில் சிக்கிய பயணிகளின் குடும்பத்தினர் யாரேனும் ரயிலில் ஏறி ஒடிசா மாநிலம் பத்ராக் நகருக்கு வரலாம். என தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் கூறினார்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…