Tamilnadu CM MK Stalin [Image source : PTI ]
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக “ஊராட்சி மணி” அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், “ஊராட்சி மணி”அழைப்பு மையத்தை வரும் 26ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறக்க உள்ளார். ஊராட்சிகளில் உள்ள புகார்களை தெரிவிக்க ஊராட்சி மணி திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் புகார் தீர்க்கும் பொருட்டு உதவி மையத்தினை அமைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக ஊரக வளர்ச்சி ஊராட்சி இயக்ககத்தில் “ஊராட்சி மணி” அழைப்பு மையம் மற்றும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வூராட்சி மணி அழைப்பு மையத்தை வரும் 26ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறக்கப்படவுள்ளது. இந்த “ஊராட்சி மணி” அழைப்பு மையத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கும் விதமாக மைய அழைப்பு எண் “155340” வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களில் “ஊராட்சி மணி” அழைப்பு மையத்தின் தொடர்பு அலுவலராக (Nodal Officer) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை (வளர்ச்சி) நியமனம் செய்யப்பட்டுள்ளது. “ஊராட்சி மணி” அழைப்பு மையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக அடிப்படை விவரங்களை தெரிவிக்கும் வகையில் நேற்று மதியம் 3.00 மணிக்கு கூடுதல் இயக்குநர் (பொது) அவர்களால் காணொளி கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த காணெளி கூட்டத்தில் தொடர்பு அலுவலர் (Nodal Officer) ஆக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கலந்துகொண்டனர். இத்துடன் “ஊராட்சி மணி” தொடர்பான விவரங்கள் மற்றும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அலுவலர்கள் நிலை விவரம் மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டிய காலக்கெடு ஆகியவை வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…