Tamilnadu CM MK Stalin [File Image]
மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் வழங்குவதற்கு ஜூலை 20 முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.
2021 சட்டமன்றத் தேர்தலில் அப்போது முக்கிய தேர்தல் வாக்குறுயாக பார்க்கப்பட்ட மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை திட்டத்தை தற்போது அமல்படுத்துவதற்கு தம்ளக் அரசு ஆயத்தமாகி வருகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.
அதில் வீட்டு ரேஷன் கார்டுகளுக்கு ஒரு பெண்ணிற்கு உரிமை தொகை வழங்கப்படும் என்றும், அவர்களின் வருமானம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்கக் கூடாது என்றும், அரசு வேலை ஓய்வூதியதாரர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது என்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து இருந்தது.
உரிமைத்தொகை யாருக்கெல்லாம் தேவைப்படுமோ அவர்களுக்கெல்லாம் கட்டாயம் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். அதனால் இதனை கண்காணிக்க மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இந்த பணியில் தன்னார்வலர்கள் உட்படுத்தப்பட உள்ளனர்.
செப்டம்பர் மாதம் முதல் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. அதற்கு விண்ணப்பிக்க மகளிர் அந்தந்த பகுதி ரேஷன் கடைகளின் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான டோக்கன் வரும் இருபதாம் தேதி ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .அதன்படி அந்த டோக்கனை பெற்று விண்ணப்பத்தை நிரப்பி ரேஷன் கடையில் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…