ரயில் விபத்து! தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழப்பா? முதற்கட்ட தகவல்!

tamilnadu people

ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழந்து உள்ளதாக முதற்கட்ட தகவல்.

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி நேற்று இரவு கோரமண்டல் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக எதிரில் வந்த பெங்களூர் யஷ்வந்தபுரம்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்ட கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் மீது மோதி பெரும் விபத்தில் சிக்கியது. இதில், சரக்கு ரயில் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவில் நடந்த கோர விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மிகவும் உருக்குலைந்த ஒரு ரயில் பெட்டியில் மீட்பு பணிகள் நீடித்து வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனால் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழந்து உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ரயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் பலி என வருவாய் துறை செயலாளர் குமார் ஜெயந்த் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தோரின் உடல்களை கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது உறுப்பினர்களுக்கும் தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்