தமிழகத்தில் முதன்முறையாக, தூத்துக்குடியில் ரூ.5க்கு முகக்கவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம் அறிமுகம்.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் இதுவரை, 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது மட்டுமல்லாமல், மக்கள் வெளியில் வரும் போது, கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்திலேயே முதன்முறையாக தூத்துக்குடியில், ரூ.5க்கு முகக்கவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்திற்கு முன்பதாகவும், அரசு மருத்துவமனைக்கு முன்பதாகவும் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த இயந்திரத்தில் ரூ.5 செலுத்தி, முக கவசத்தை பெற்று செல்கின்றனர். இந்த இயந்திரத்தின் மூலம், ஒரு நாளைக்கு 500-க்கும் மேற்பட்ட முக கவசங்களை மக்கள் பெற்று செல்வதாக கூறுகின்றனர்.
இதே முக கவசத்தை நாம் வெளியில் உள்ள மருந்து கடைகளில் வாங்கினால், ரூ.10-20 வரை விற்பனை செய்யப்படுகிற நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் உருவாக்கப்படுள்ள இந்த முகக்கவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…