UdhayanidhiStalin: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்தியாவில் இன்று இந்தி தினமான ‘இந்தி திவாஸ்’ கொண்டாடப்படுகிறது. இந்தி நிவாஸ் தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஹிந்தி பற்றிய பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளமான X தளத்தில் வீடியோ வாயிலாக மக்களுக்கு எடுத்துரைத்தார். அதில் அவர் பேசுகையில், இந்தி மொழி இந்தியாவில் உள்ள எந்த மொழிகளுடனும் போட்டியிட்டதில்லை. போட்டியிடவும் போவதில்லை.

அனைத்து மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலம் ஒரு வலுவான நாடு உருவாகும். அனைத்து உள்ளூர் மொழிகளுக்கும் அதிகாரம் அளிக்கும் மையமாக இந்தி மாறும். இந்தியா பல்வேறு மொழிகளின் நாடாக இருந்து வருகிறது. இந்திய மொழிகளின் பன்முகத்தன்மையை இந்தி ஒன்றிணைக்கிறது. இந்தி ஒரு ஜனநாயக மொழியாக இருந்து வருகிறது. இது பல்வேறு இந்திய மொழிகள் மற்றும் பல உலகளாவிய மொழிகளைக் கௌரவித்துள்ளது.

சுதந்திரப் போராட்டத்தின் கடினமான காலங்களில் நாட்டை ஒன்றிணைப்பதில் இந்தி மொழி மிக முக்கிய பங்காற்றியுள்ளது. இந்தி, தகவல் தொடர்பு மொழியாக, இருந்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தை கிழக்கிலிருந்து மேற்காகவும், வடக்கிலிருந்து தெற்காகவும் முன்னெடுத்துச் செல்வதில் இந்தி முக்கியப் பங்காற்றியுள்ளது.

1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டக் கலைஞர்களால் இந்தி மொழி அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன்பின் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தேசிய மற்றும் உலகளாவிய மையங்களில் இந்திய மொழிகளுக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைத்துள்ளது என பல்வேறு கருத்துக்களை இந்தி மொழி சார்ந்து பேசியுள்ளார்.

இந்த நிலையில், இந்தி மொழி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது, பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது என்று வழக்கம் போல தனது இந்தி மொழிப் பாசத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொழிந்துள்ளார்.

இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம் தான் இந்தக் கருத்து. தமிழ்நாட்டில் தமிழ், கேரளாவில் மலையாளம். இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே வந்து அதிகாரமளிக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார். நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது. இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும் என பதிலடி கொடுத்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…

6 hours ago

தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…என்னென்ன சிறப்பம்சங்கள்?

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…

7 hours ago

தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடி…தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…

7 hours ago

அஜித்துடன் ஆக்சன் படம் செய்வேன் …உறுதி கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…

8 hours ago

INDvsENG : இங்கிலாந்து அணியின் அபார பேட்டிங்.. தடுமாறும் இந்தியா!

மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…

8 hours ago

பிரதமர் மோடி தமிழகம் வருகை…பாஜக, அதிமுக கொடியுடன் விசிக கொடி!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…

9 hours ago