தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், இந்த பட்ஜெட் தாக்கல் எந்த வகையிலும் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. இது மக்களைப் பற்றி கவலைப்படாத நிதிநிலை அறிக்கை. நிதிநிலை அறிக்கை உரையைக் கேட்பவர்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏமாற்றியுள்ளார்.
இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான பட்ஜெட் தாக்கலாக இது அமைந்துள்ளது. எதிர்பார்த்ததைப்போல் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்கும் முடிவு மக்களை பாதிக்கும். ஜிஎஸ்டி வரி விதிப்பில் எந்தக் குறைப்பும் இடம் பெறவில்லை. அந்த அறிவிப்புகள் ஒதுக்கீடாகவே உள்ளன. நடைமுறைக்கு வர நீண்ட காலம் எடுக்கும் என்று விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…