வாச்சாத்தி வழக்கு: அதிகார வர்க்கத்துக்குப் புகட்டப்பட்ட பாடம் இந்தத் தீர்ப்பு.. திருமாவளவன்!

Published by
பாலா கலியமூர்த்தி

வாச்சாத்தி மலை கிராம பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தருமபுரி முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அதன்படி, இவ்வழக்கில் 269 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்கள். தீர்ப்பு வரும் போது 54 பேர் உயிருடன் இல்லாததால் மீதி இருக்கும் 215 பேருக்கும் தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்.

இதில், 12 பேருக்கு 10 ஆண்டு சிறை, 5 பேருக்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கட்டிருந்தது. மேலும், வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மேல்முறையீடு மனுக்களை சென்னை ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

வாச்சாத்தியில் பாலியல் கொடூரத்தால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை அல்லது சுய தொழிலுக்கு உதவி வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. தருமபுரி முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற  உத்தரவிடத்துக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்பு அளித்தனர்.

மேலும் இதுதொடர்பான தகவலுக்கு: வாச்சாத்தி வழக்கு: மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி.. குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி! ஐகோர்ட் தீர்ப்பு!

அந்தவகையில், வாச்சாத்தி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கின்றோம் என அக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், வாச்சாத்தி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கின்றோம். இதற்காகத் தொடர்ந்து உறுதியாகப் போராடிய வாச்சாத்தி மக்களுக்கும், அவர்களுக்கு துணையாக இருந்த சிபிஐ(எம்) கட்சியினருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பழங்குடி மக்கள் உள்ளிட்ட எளிய மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்துக்குப் புகட்டப்பட்ட பாடம் இந்தத் தீர்ப்பு. கடந்த 30 ஆண்டு காலமாக நடைபெற்ற நீண்ட சட்டப் போராட்டத்தின் விளைவாகவே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, ஐகோர்ட் உத்தரவின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும், வேலையும் வழங்குவதோடு, தீர்ப்பில் குறிப்பிட்டது போல் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், வனத்துறை அலுவலர் ஆகியோர் மீது முறையாக நடவடிக்கை எடுக்கவும் முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

27 minutes ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

39 minutes ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

2 hours ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

2 hours ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

3 hours ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

3 hours ago