[Image Source : puthiya thalaimurai ]
இளைஞர்களை சீரழிக்கும் வகையில், தானியங்கி மூலம் மதுபான விறபனையை துவக்கி உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கருத்து
சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தில் தானியங்கி முறையில் மதுபானம் விற்பனை செயும் இயந்திரத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏ.டி.எம். இயந்திரம் போல் செயல்பட்டு மது மற்றும் பீர் வகைகளை விநியோகம் செய்ய பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்க்கு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், இளைஞர்களை சீரழிக்கும் வகையில் தானியங்கி மூலம் மதுபான விற்பனையை துவக்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் மக்களைப் பற்றி கொஞ்சம் கூட அக்கறை கொள்ளாமல் வருவாயை மட்டுமே கருத்தில்கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது வெட்கக்கேடானது.
கொலைக்களமாக மாறிவரும் தமிழகத்தில், மதுவால் ஏற்படும் மரணங்களைப் பெருக்கி, தன் அரசின் மற்றும் தனிப்பட்ட கஜானாவை நிரப்ப, மக்களைக் குறிவைத்து திட்டம் தீட்டி செயல்படும் இந்த அடாவடி அரசை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்தை இந்த விடியா அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என தெரிவித்துளளார்.
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…
சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…