ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற நிலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டது .அதில் அதிமுக கூட்டணியை விட திமுக கூட்டணியே அதிக இடங்களில் கைப்பற்றியது.
இதனையடுத்து நாளை மாவட்ட ஊராட்சி தலைவர் ,ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மறைமுக தேர்தலில் வீடியோ பதிவை செய்யவேண்டும் என திண்டுக்கல்லைச் சேர்ந்த லலிதா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது .அந்த விளக்கத்தில் ,குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மறைமுக தேர்தல் வீடியோ பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அனைத்து இடங்களிலும் ஏன் வீடியோ பதிவு செய்யக்கூடாது என்று கேள்வி எழுப்பியது. மறைமுக தேர்தல் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில்தேர்தல் ஆணையம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.மேலும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இன்றே அறிவுறுத்தல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இறுதியாக வீடியோ பதிவு தொடர்பாக ஜனவரி 21- ஆம் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…