தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து, ஊரடங்கினைப் பொதுமக்கள் சரியாகக் கடைப்பிடிக்கும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்பிற்க்கு உதவும்வகையிலும் தமிழக சீர்மிகு காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதிலும் குறிப்பாக, அவர்கள் நிம்மதியாக நல்ல உணவை உண்டு பல நாட்கள் ஆகியிருக்கலாம். ஆங்காங்கு கிடைக்கும் உணவுகளை உண்டு மக்களை பாதுகாக்கும் சிறந்த சேவையாற்றி வருகின்றனர். இந்நிலையில் காவலர்களுக்கு ஒரு நாளாவது பிரியாணி விருந்து போட வேண்டும் என்று விரும்பிய புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தினர், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 200 காவலர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்தியிருக்கின்றனர்.
இதுகுறித்து கூறிய விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர் பர்வேஸ், கொடூரமான கொரோனாவைத் தடுக்க அரசு அறிவித்த தீவிர ஊரடங்கைச் சரியாக கடைப்பிடிக்க வைக்க தினமும் சாலையில் நின்று நமக்காக காவலர்கள் போராடுகிறார்கள். அவர்களுக்காக பிரியாணி விருந்து போடலாம்னு முடிவு பண்ணோம். இதற்காக, 200 பிரியாணி பொட்டலங்களைத் தயார் செய்து, நகர் ஸ்டேஷன், கணேஷ் நகர் ஸ்டேஷன், டிராஃபிக் போலீஸ் அலுவலகம் என காவலர்கள் இருக்கும் இடங்களுக்கு நேரடியாகப் போய் பிரியாணி பொட்டலங்களையும் தண்ணீர் பாட்டிலையும் கொடுத்திட்டு வந்தோம். நமக்காகப் போராடும் தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட அனைவருக்கும் அனைவரும் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…