Anitha Radhakrishnan [File Image]
மீனவர்களுக்கான தடைகால நிவாரண உதவித்தொகை முதலமைச்சர் அறிவுரைப்படி உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் தகவல்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்தை மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் வாக்கி டாக்கி விரைவில் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும், மீனவர்களுக்கான தடைகால நிவாரண உதவித்தொகை முதலமைச்சர் அறிவுரைப்படி உயர்த்தி வழங்கப்படும். இதுதொடர்பாக முதலமைச்சர் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்பார். மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசை முதல்வர் வலியுறுத்துவார் எனவும் தெரிவித்தார்.
இதனிடையே, பேசிய அமைச்சர், பசுந்தீவன உற்பத்தியை அதிகரித்து பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். மேலும், ஆவினில் ஒட்டுமொத்தமாக பால் உற்பத்தி குறையவில்லை. சில தனியார் பால் பண்ணையாளர்கள் விலை அதிகம் கொடுத்து பாலை வாங்கி வருகிறார்கள். ஆவின் நிறுவனத்தில் ஒரு தட்டுப்பாடும் இல்லை. தட்டுப்பாடு இல்லாமல் பால் விநியோகம் செய்வதில் ஆவின் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…