அதிமுக ஆட்சியில் வீண் செலவு.. முறையாக வீடுகள் ஒதுக்கவில்லை – அமைச்சர் அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி

Published by
பாலா கலியமூர்த்தி

ஒரு நிர்வாகம் எப்படி நடக்கக்கூடாது என்பதற்கு கடந்த அதிமுக ஆட்சி ஒரு உதாரணம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.

சி.ஏ.ஜி. அறிக்கை தொடர்பாக சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 11 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியை நோக்கி வைத்துள்ளனர். அதிமுக ஆட்சியின் போது 3% மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகளை நோக்கி சென்றுள்ளனர் என தெரிவித்த அமைச்சர், 2016-ஆம் அண்டு முறைகேடுகளில் ஈடுபட்ட 6 அதிகாரிகளை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளோம்.

மடிக்கணினி திட்டம்:

மடிக்கணினி அதிமுக ஆட்சியில் 1.75 மாணவர்களுக்கு வழங்கவில்லை என குற்றசாட்டினார். எனவே, அதிமுக ஆட்சியில் விடுபட்டவர்களையும் சேர்த்து மொத்தம் 14 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். நிதி நிலைமைக்கு ஏற்ப மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம் என்றார்.

முறைகேடுகள்:

மேலும், 2016-2021 அதிமுக ஆட்சியில் வீடுகள் கட்டப்பட்டதில் ஒப்புதல் அளிக்கப்பட்டதை விட குறைவான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 5.09 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், 2.80 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. தெரிவித்துள்ளது.

பிரதமரின் வீடு கட்டும் திட்டம்:

அதிமுக ஆட்சியில் ஆதி திராவிடர், பட்டியல் இன மக்களுக்கு வழங்க வேண்டிய 60% வீடுகளை வழங்கவில்லை. ரூ.2.18 கோடி தேவையற்ற செலவு என சி.ஏ.ஜி. அறிக்கை குறிப்பிட்டு உள்ளது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.50 கோடி முறைகேடு நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் அம்பலமாகியுள்ளது.

வீண் செலவு:

தொடர்ந்த்து பேசிய அமைச்சர், பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய வீடுகளை, பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு வழங்கியுள்ளனர். தேவையற்ற செலவுகளையே அதிமுக அரசு செய்துள்ளது என்று சிஏஜி அறிக்கை தெளிவாக காட்டியுள்ளது. அதிமுக ஆட்சியில் புத்தகப்பையில் இருந்த படத்தை மாற்ற ரூ.13 கோடி செலவாகும் என்பதால், அதை மாற்ற வேண்டாம் என்று கூறியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஒரு நிர்வாகம் எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி ஒரு உதாரணம் எனவும் கூறினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

7 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

7 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

8 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

9 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

9 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

11 hours ago