மழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் – அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி!

Published by
பாலா கலியமூர்த்தி

மழை பாதிப்பு குறித்து 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறோம் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கனமழையால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.  சென்னையில் 27 ஆண்டுகளுக்கு பின்பு ஜூன் மாதத்தில் 3 மடங்கு அதிக மழை பதிவாகி உள்ளது. நாளை முதல் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், சென்னையில் மழை தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நகராட்சிகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் தயாராக உள்ளனர்.

மழை பாதிப்பு குறித்து 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறோம். கடந்த மழையின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக எந்த மாவட்டத்திலும் தற்போது வரை சேதம் இல்லை. பருவம் தவறிய மழை மற்றும் திடீர் மழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் எனவே தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பண்ட் அவுட் ஆனார் போட்டி மாறிடுச்சு! தோல்வி குறித்து கில் ஸ்பீச்!

லண்டன் :  ஜூலை 10 முதல் 14 வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட்…

5 minutes ago

நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது ஒத்திவைப்பு?

டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, கடந்த 2017-ஆம் ஆண்டு ஏமன் குடிமகன் தலால் அப்தோ மஹ்தியை கொலை…

10 minutes ago

எங்கள் உள்ளம் கலங்குகிறது…சண்டைக்கலைஞர் மோகன்ராஜ் உயிரிழப்பு குறித்து இயக்குநர் பா.ரஞ்சித்!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின்போது, (ஜூலை 13) கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது…

1 hour ago

ஏமனில் மரண தண்டனை…நிமிஷா பிரியாவை காப்பாற்ற கேரள இஸ்லாமிய தலைவர் முயற்சி!

டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, கடந்த 2017-ஆம் ஆண்டு ஏமன் குடிமகன் தலால் அப்தோ மஹ்தியை…

2 hours ago

பாஸ்போர்ட் தொலைந்து விட்டது… புதிய பாஸ்போர்ட் வேணும் -சீமான் மனு!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி…

2 hours ago

குரூப் – 2, குரூப் – 2ஏ தேர்வுக்கான தேதியை அறிவித்தது TNPSC!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2025 செப்டம்பர் 28 அன்று குரூப் 2 மற்றும் 2A…

3 hours ago