தன்மானத்திற்காக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினோம்.! அதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி.!

Published by
மணிகண்டன்

முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, ஜெயலலிதா பற்றியும், அதிமுக தலைவர்கள் பற்றியும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவ்வப்போது தனது விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்து இருந்த போதும், கூட்டணிக்குள் இருக்கும் கட்சி குறித்த விமர்சனமானது அதிமுகவினரின் எதிர்ப்பலைகளை எதிர்கொண்டது.

இந்நிலையில் தான் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்து பேட்டியளித்த அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது என செய்தியாளர்கள் மத்தியில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த கூட்டணி முறிவை இரு கட்சியை சேர்ந்தவர்களும் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இந்த முறிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், இந்த கூட்டணி ஏன் முறிந்தது என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார். அவர் கூறுகையில், அதிமுக தன்மானத்திற்குக்கு இழுக்கு ஏற்பட்ட காரணத்தால் நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என கூறினார்.

பாஜக கூட்டணியில், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆகியோர் இருந்த காரணத்தால் தான் கூட்டணியில் இருந்து வெளியேறினீர்களா என்று செய்தியாளர்கள் கேட்ட போது, அப்படி இல்லை எங்கள் முன்னாள் அமைச்சர்களை  விமர்சித்து பேசுவது, எங்கள் மாநாட்டை குறை கூறி பேசுவது என கூட்டணி கட்சியினரையே விமர்சிக்கும் போக்கு பாஜகவிடம் இருந்தது. தன்மானம் தான் எங்கள் சொத்து, அதனால் தான் நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என வைகை செல்வன் தெரிவித்தார்.

கூட்டணி முறிவுக்கு பின்னர் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்க வேலைகள் நடைபெற்று வருகிறது. பொதுச்செயலாளர் இபிஎஸ் வியூகம் அமைத்து வருகிறார் . நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியாக வெற்றி பெறுவோம் எனவும் வைகை செல்வன் நம்பிக்கை தெரிவித்தார்

அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு ஜெயலலிதா  , அண்ணா பற்றிய விமர்சனங்கள் காரணம் இல்லை. அதிமுக முன்னாள் அமைச்சர்களின் டெல்லி பயணம் ஏமாற்றம் அடைந்தது தான் காரணம் என டிடிவி கருத்து பற்றி கேட்டபோது, அதில் நாங்கள் ஏமாறவில்லை. டிடிவி தினகரன் தான் ஏமாந்துவிட்டார்.  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்பட்டால், மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி அமையுமா என கேட்டதற்கு, அதனை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்வார் என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

5 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

5 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

6 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

7 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

8 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

8 hours ago