மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில், மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. எனவே இன்று முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஊரடங்கு தளர்வு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து, அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியாகி உள்ளது.
அதன்படி,50 சதவிகித பணியாளர்களை கொண்டு (குறைந்தபட்சம் 20 நபர்கள்) மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 10% பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொழிற்பேட்டையிலுள்ள ஜவுளி நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…