AIADMK Chief Secretary Edapadi Palanisamy [Indian Express]
நடப்பது பொம்மை முதல்வரின் சர்க்கஸ் அரசு தான் என்பதை நித்தம் ஒரு அமைச்சர் உறுதி செய்வதற்கு நன்றி
அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் மணிப்பூர் விவகாரம் பற்றி அதிமுக இதுவரை வாய் திறக்காதது அவர்கள் இரட்டை வேடத்தை காட்டுகிறது.எ மணிப்பூர் விவகாரத்தை கண்டிக்காமல் எதிர்க்கட்சி தலைவர் அமைதி காப்பது ஏன்? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இது குறித்து அதிமுக தரப்பில் மணிப்பூர் சம்பவத்திற்கு நேற்று இபிஎஸ் கண்டனம் தெரிவித்த செய்தியை பதிவிட்டு, அதிமுக ட்விட்டர் பக்கத்தில், இந்த விடியா முதல்வரின்’ ஆட்சியில் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை யாரும் பொய் பிரச்சாரம் செய்ய தயங்குவதில்லை ,மணிப்பூர் குறித்து எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் நேற்றே தனது கடும் கண்டனங்களை தெரிவித்துவிட்ட நிலையில், எதிர்கட்சித் தலைவர் மணிப்பூர் குறித்து பேசவே இல்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு, கூறி இருப்பது மிக மோசமான ஏமாற்று வேலை ! இந்த சமுகவலைதள யுகத்தில் கோமாளித்தனமானதும் கூட…!
நடப்பது பொம்மை முதல்வரின் சர்க்கஸ் அரசு தான் என்பதை நித்தம் ஒரு அமைச்சர் உறுதி செய்வதற்கு நன்றி! அது சரி…, மணிப்பூர் குறித்து கழக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசினாரா என கேள்வி கேட்பவர்கள், மேகதாது அணை கட்ட ஆயத்த பணிகளை செய்து கொண்டிருக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசையோ , தன் பக்கத்தில் உட்கார்ந்து மகிழ்ந்து குலாவிய டி.கே.சிவகுமாருக்கு எதிராகவோ இதுவரை வாய்திறக்காதது ஏன் என்று கேள்வி கேட்பார்களா ?’ என பதிவிட்டுள்ளனர்.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…