பொதுமுடக்கத்தை நீட்டிக்க இதுவரை முடிவு செய்யவில்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக சென்னை உள்ளிட்ட இடங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு அதிகமாகி வருகிறது. தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் புதிதாக 2115 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை, 54,449 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,322 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 38,327 ஆக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக சென்னை ,செங்கல்பட்டு,திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவரிடம் தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் பொதுமுடக்கத்தை நீட்டிக்க இதுவரை முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…
சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…
சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…
சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…
திருப்பத்தூர் : ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரை கீழே தள்ளிய வழக்கில், குற்றவாளியான ஹேமராஜுக்கு…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (மதிமுக) ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு தான் காரணம் இல்லை என்று மல்லை…