மகளிர் உரிமைத் தொகை நிபந்தனைகளில் திருத்தம் தேவை..! விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்..!

thirumavalavan

மகளிர் உரிமைத் தொகை நிபந்தனைகளில் திருத்தம் தேவை என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் அப்போது முக்கிய தேர்தல் வாக்குறுயாக பார்க்கப்பட்ட மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டத்தை தற்போது அமல்படுத்துவதற்கு தமிழக அரசு ஆயத்தமாகி வருகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.

அதில் வீட்டு ரேஷன் கார்டுகளுக்கு ஒரு பெண்ணிற்கு உரிமை தொகை வழங்கப்படும் என்றும், அவர்களின் வருமானம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்கக் கூடாது என்றும், அரசு வேலை ஓய்வூதியதாரர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது என்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து இருந்தது.

இந்நிலையில், பொதுமக்களின் உணர்வுகளை மதித்து, மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான நிபந்தனைகளில் திருத்தம் கொண்டுவர முதல்வர் முன்வர வேண்டும். தற்போதுள்ள நிபந்தனைகளால் பெரும்பாலான பெண்கள் உரிமைத் தொகையை பெற முடியாத நிலை இருப்பதால் அதில் திருத்தம் தேவை என விசிக எம்.பி. திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், செப்டம்பர் மாதம் முதல் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. அதற்கு விண்ணப்பிக்க மகளிர் அந்தந்த பகுதி ரேஷன் கடைகளின் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான டோக்கன் வரும் 20ம் தேதி ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்