கடந்த ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர், முகாம்களில் விண்ணப்பித்து கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு புதிதாக 7,35,000 பயனாளிகளுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையினை வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது.
பொங்கல் பரிசு தொகுப்பு: இன்று காலை தொடங்கி வைக்கும் முதல்வர்.!
இதனால் நவம்பர் மாதம் முதல் 1 கோடியே 13 லட்சத்துக்கும் அதிகமானோர் கலைஞர் உரிமை தொகை பெற்று வந்த நிலையில் மேலும் 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் தங்களுக்கும் உரிமை தொகை வழங்க வேண்டும் என்று மேல்முறையீடு மனு கொடுத்தனர். இந்த மாதம் முதல் மேல்முறையீடு செய்தவர்களில் மேலும் 2 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த மாதம் முதல் 1.15 கோடி பேருக்கு உரிமைத்தொகை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
வழக்கமாக மகளிர் உரிமை தொகையை மாதம் மாதம் 15-ம் தேதியில் வங்கியில் செலுத்தத்தப்பட்டு வருகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பொங்கல் முன்னிட்டு இந்த மாதம் ஜனவரி 10-ஆம் தேதி அதாவது (இன்று) வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இன்று மகளிர் உரிமைத் தொகை பயனாளர்கள் வங்கி கணக்கில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…