நவம்பர் 4-ஆம் தேதி அமமுகவின் செயற்குழு கூட்டம்..!

TTV DHINAKARAN

அமமுகவின் செயற்குழு கூட்டம் திருச்சியில் வரும் நவம்பர் 4-ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளைத் தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் கழகத் தலைவர் திரு.C.கோபால் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் தலைமையில் வருகிற 04:11.2023 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் திருச்சி, ஃபெமினா ஹோட்டலில் உள்ள காவேரி ஹாலில் நடைபெற உள்ளது.

ஆம்னி பேருந்து வேலைநிறுத்தம் வாபஸ்..! அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயங்கும்..!

கழக செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05122024
Maharashtra cm
Somanath
colours (1) (1)
Tughlaq AliKhan
rinku singh kkr Sunil Narine