#BREAKING : யூடியூபர் மாரிதாஸ் மீண்டும் கைது.!

Published by
murugan

கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் இன்று நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

சமீபத்தில் முப்படை தலைமை தளபதி ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் யூடியூபர் மாரிதாஸை அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் தேனி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், யூடியூபர் மாரிதாஸை மற்றொரு வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது. போலி இமெயில் மூலம் யூடியூபில் அவதூறு கருத்துக்களை பரப்பியதாக 2020-ல் பதியப்பட்ட வழக்கில் மாரிதாஸ் மீண்டும் கைது செய்யுயப்பட்டார்.

தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதற்கிடையில், ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் யூடியூபர் மாரிதாஸை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த யூடியூபர் மாரிதாஸை மீண்டும் போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த 04.04.2020ல் காதர் மீரான் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மேலப்பாளையம் காவல் நிலையத்தில் 292A, 295 A, 505 ( 2), It act 67 என 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று மாரிதாஸ் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் இன்று நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். சென்னை புழல் சிறையில் இருந்து நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நெல்லை காவல்துறையினர் சென்னையில் இருந்து நெல்லைக்கு யூடியூபர் மாரிதாஸை அழைத்து வருகிறார்கள்.

Published by
murugan

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

13 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

14 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

14 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

15 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

17 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

17 hours ago