cyanide KILLER [Image Source : hindustantimes ]
சயனைடு பயன்படுத்தி தனது நண்பர்கள் 12 பேரை கொன்றதாக 32 வயது பெண்ணை தாய்லாந்து போலீசார் கைது செய்துள்ளனர்.
தாய்லாந்தின் பாங்காக் எனும் நகரில் வசித்து வந்தவர் சிரிபான் கான்வாங். கடந்த 14ம் தேதி சிரிபான் கான்வாங் சுற்றுலாவுக்காக தன் தோழி சாராரத் என்பவருடன் ரட்சாபுரி மாகாணத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு இருந்த ஆற்றங்கரைக்கு இருவரும் சென்ற நிலையில், திடீரென சிரிபான் கான்வாங் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
பிறகு அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போன் உள்ளிட்டவை காணாமல் போன தாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றால் காவல்துறையினர் சிரிபான் கான்வாங்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகவும், அவருடைய உடலில் சயனைடு விஷம் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால், சிரிபான் கான்வாங் தோழி சாராரத் மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடந்தினார்கள். விசாரணையில் ” 12 பேரை சயனைடு கொடுத்து அவர் கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலைகளை அவர் கடந்த 3 ஆண்டுகளாக செய்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
சாராரத் கொலை செய்த அனைவரும் சுமார் 33 வயது முதல் 44 வயது வரை இருப்பவர்கள் எனவும், இவர்களிடம் இருந்து பணம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை திருடுவதற்காக இந்த கொலைகளை அவர் செய்துள்ளதாக விசாரணை நடத்திய காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…