Categories: உலகம்

அதீத ஹெட்போன் பயன்பாடு..! 40 கோடி பேருக்கு செவித்திறன் பாதிப்பு !!

Published by
அகில் R

WHO : உலக சுகாதார நிறுவனம் தற்போது செவித்திறன் பாதிப்பு பற்றிய சில அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாம் பாட்டு கேட்பதற்கு பயன்படுத்தும் ஹெட் போன்களால் நம் காதுகளுக்கு அதிக ஆபத்து இருப்பதை நாம் ஒரு போதும் அறிந்திருக்கமாட்டோம். அப்படியே அறிந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் அதிக சத்தம் வைத்து கொண்டு பாடல்களை கேட்போம். இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் நமது செவித்திறன் பாதிப்படைந்து நமக்கு இருக்கும் கேட்கும் திறன் முற்றிலும் செயலிழந்து விடும்.

உலகம் முழுவதும் உள்ள 40 கோடி பேருக்கு செவித்திறன் பாதிப்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் 20 சதவீதம் பேருக்கு மட்டும் காது கேட்கும் கருவி உள்ளதாக கூறுகிறார்கள் மீதம் உள்ளவர்கள் இதன் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது  217 மில்லியன் மக்கள் காது கேக்காமல் பாதிப்படைந்துள்ளனர். இது உலகமக்கள் தொகையில் சுமார் 21.52 சதவீதமாகும் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்து உள்ளது.

இது வருகிற 2050 ஆண்டில் இந்த எண்ணிக்கை படிப்படியாக 322 மில்லியனாக உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது போன்ற செவித்திறன் இழப்பு பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையிலும் அவர்களது குடும்பங்களிலும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துகிறது என் தெரிவிக்கின்றனர். மேலும், இதன் சிகிச்சைக்காக மட்டும் உலகளவில் சுமார் 21 கோடியே 80 லட்சத்திற்கும் மேல் செலவாகிறது என கண்டுப்பிடித்துள்ளனர்.

மேலும், அடுத்த 30 ஆண்டுகளில் இதனால் பாதிப்படையும் நபர்களில் ஒருவருக்கு காதில் புது வித பாதிப்பு ஏற்படலாம் எனவும் அது நமது எதிர்கால சந்ததியை கூட பாதிக்கலாம் எனவும் கணித்துள்ளனர். நாம் நமது பொழுது போக்கிற்காக கேட்க உபயோகிக்கும் ஹெட்போன்களின் தாக்கத்தை தற்போதாவது புரிந்து கொண்டு அதை குறைவாக உபயோகித்து வருங்கால சந்ததிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவே நாம் அமைய வேண்டும்.

எனவே, மொபைல் போன், ஹெட்போன்களை உபயோகிக்கும் போது குறைவான சத்தத்தை வைத்து கொண்டு குறைவான சமயம் மட்டுமே அதற்கென நாம் செலவழித்தால் அது போதுமானது. மிக முக்கியமாக நமது குழந்தைகளிடம் இது போன்ற ஹெட்போன்களை கொடுக்காமலும் அவர்களே அறியாமல் உபயோகித்தாலும் அதனால் விளையும் தீங்கை எடுத்து கூறி நாம் பாதுகாப்போம்.

Published by
அகில் R

Recent Posts

விருதுநகர் : பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…

39 minutes ago

சபாஷ் சரியான போட்டி…குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா!

குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…

1 hour ago

மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்!

சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…

2 hours ago

தற்காலிகமாக விலகிய தவெக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்! காரணம் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…

2 hours ago

ட்ரம்ப்புடன் மோதல்..புதிய கட்சியை தொடங்கியதாக அறிவித்த எலான் மஸ்க்!

நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…

3 hours ago

பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ்! எம்எல்ஏ அருளுக்கு இடம்!

திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…

4 hours ago