[Image source : ANI]
இம்ரான் கான் காவலில் இருக்கும்போது கொல்லப்பட வாய்ப்பு இருப்பதற்கான அச்சம் அதிகரித்து வருகிறது. – அமெரிக்க முன்னாள் தூதர் சல்மே கலீல்சாத்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை, ஊழல் குற்றசாட்டுகள் தொடர்பாக அண்மையில் சிறப்பு பாதுகாப்பு படையினர் மூலம் இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்திலேயே அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
தற்போது அவர் விசாரணைக்காக நீதிமன்ற காவலில் இருக்கிறார். அவரது ஆதரவாளர்கள் பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் பொது சொத்துக்களை சேதப்படுத்தி வருகின்றனர். இதனால், பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க முன்னாள் தூதர் சல்மே கலீல்சாத், இம்ரான் கானை காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், இம்ரான் கான் காவலில் இருக்கும்போது கொல்லப்பட வாய்ப்பு இருப்பதற்கான அச்சம் அதிகரித்து வருகிறது. என்றும், இன்று நீதிமன்றத்தில் நீதிபதி முன்பும் இம்ரான் கான் இந்த செய்தியையே வெளிப்படுத்தினார் எனவும் கலீல்சாட் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நெல்லை : மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது…
கூகுளின் Find My Device இப்போது Google Find Hub ஆக மாறி, ஆண்ட்ராய்டு ஃபோன்கள், இயர்பட்ஸ், புளூடூத் டிராக்கர்கள்…
புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 18, 2025) பிகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு பயணம்…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
சென்னை: மத மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மதுரை ஆதீனம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில்,…
சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…