Categories: உலகம்

இஸ்ரேலின் அதிநவீன இரும்புக்கூரையை ஈசியாக தகர்த்து ஹமாஸ் குண்டு மழை பொழிந்தது எப்படி?

Published by
கெளதம்

கடந்த 2007 ஆம் ஆண்டு இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் காசா மீது இஸ்ரேல் முற்றுகையைத் தொடங்கியது. அதன்படி, காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வருகிறது.

அந்த வகையில், கடந்த 7ம் தேதி சனிக்கிழமை தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து 5,000 ராக்கெட்டுகள் மூலம், மத்திய கிழக்கில் உள்ள நாடான இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு போர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை தொடங்கிய இந்த தாக்குதல் மூன்றாவது நாளாக இன்றும் ஓயாமல் இஸ்ரேல் – ஹமாஸ் மாறிமாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இரு தரப்பிலும் 1,100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த போரில் பலரும் காயமடைந்து சிகிச்சையில் உள்ளதால், உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதல் அந்த நாட்டை மட்டும் இல்லாமல், உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இஸ்ரேலில் இரும்புக்கூரை Iron-Dome (அயர்ன் டோம்) என்று கூறப்படும் அதிநவீன பாதுகாப்பையும் மீறி எப்படி ஹமாஸ் அமைப்பினர் உள்ளே நுழைந்தனர் என்ற சந்தேகம் அதிமாக எழுந்துள்ளது.

இரும்புக்கூரை (Iron-Dome) 

இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனமான ஏரோஸ்பேஸ்  ண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷனால் உருவாக்கப்பட்ட வானிலை வான் பாதுகாப்பு அமைப்பு தான் அயர்ன் டோம் ஆகும். ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம் என்று சொல்லப்படும் இந்த இரும்புக்கூரை வானில் ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை இடையே மறித்து அதனை அழிக்கும் வகையில் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இது ராக்கெட்களை கண்டறிந்து அவற்றின் பாதையை கணக்கிடுகிறது. 2005ல் உருவாக்கப்பட்ட இந்த அயர்ன் டோம், இஸ்ரேலை சுற்றியுள்ள எதிர் நாடுகளின் போர் காலத்திற்காக, இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு முக்கியமாக பயன்படுத்தப்பட்டது.

2011 முதல் 2012ல் முறையாக செயப்படுத்தப்பட்ட அயர்ன் டோம், ராக்கெட்டுகளைக் கண்டறியவும் கண்காணிக்கவும், அந்த ராக்கெட்டுகளின் பாதையைத் தீர்மானிக்கவும், எந்த ராக்கெட் எந்த இலக்கை தாக்கும் என்பதை கணிக்கவும் பயன்படுத்தப்படுத்தப்பட்டது.

2014 இல், அயர்ன் டோம் லெபனான போரின் போது 4,200 க்கும் மேற்பட்ட ஹெஸ்பல்லா ராக்கெட்டுகளை இடைமறித்து அழித்தது. 2012 இல், இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதல்களின் போது 3,800 க்கும் மேற்பட்ட  ராக்கெட்டுகளை இடைமறித்து அழித்தது.

அயர்ன் டோம் பலவீனத்தை கண்டுபிடித்த ஹமாஸ் 

இந்நிலையில், இந்த முறை ஹமாஸ் குழு, அயர்ன் டோம் பற்றிய முழு விவரத்தையும் தெரிந்து கொண்டு, ஒரே நேரத்தில் இஸ்ரேலின் பல பகுதிகளை குறி வைத்து சுமார் 5,000 ராக்கெட்டுகளை 20 நிமிடங்களில் ஏவியுள்ளது. இப்படி தாக்கினால் இரும்புக்கூரை (அயர்ன் டோம்) பாதுகாப்பு அமைப்பால் சமாளிக்க முடியாது என தெரிந்து இவ்வாறு தாக்கியுள்ளது ஹமாஸ் குழு.

இல்ல பகுதிகளிலும் இருந்து வந்த 5,000 ராக்கெட்டுகளை சமாளிக்க முடியாமல், குழம்பி போனது அயர்ன் டோம். இருந்தாலும், 90% தாக்குதல்களை இரும்புக்கூரை (அயர்ன் டோம்) தடுத்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அயர்ன் டோம் பலவீனத்தை கண்டறிந்து அதனை ஈஸியாக தகர்த்திவிட்டு ஹமாஸ் குழு, காசா பகுதியில் புகுந்து தனது கட்டுப்பாட்டில் கொன்டுவர முயற்சித்து வருகின்றன.

இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள் காசா எல்லை

தற்பொழுது, காசா எல்லை முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசா எல்லை  முழுவதும் இஸ்ரேல் ராணுவ படைகளின்  கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவ அமைச்சர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து காசாவிற்கு மின்சாரம், எரிபொருள் உள்ளிட்டவற்றின் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. போர் காரணமாக காசா பகுதியிலிருந்து 1.2 லட்சம் மக்கள் வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

8 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

8 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

10 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

10 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

12 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

13 hours ago