Parvez Elahi [Image-Twitter/@ChParvezElahi]
இம்ரான் கானின் கட்சித் தலைவர் பர்வேஸ் இலாஹி லாகூரில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) தலைவர் பர்வேஸ் இலாஹி, லாகூரில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியில் இருந்து, ஊழல் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜியோ(Geo) நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் பஞ்சாப் முதல்வர், லாகூர் குல்பெர்க் மாவட்டத்தில் உள்ள முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட்டர் ஜாஹூர் இலாஹியின் அடுக்குமாடி குடியிருப்பு அருகே சென்றபோது, ஊழல் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக உடல்நலக் குறைபாடுகள் காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக, ஊழல் எதிர்ப்பு நீதிமன்றம் இலாஹியின் தற்காலிக விடுதலையை ரத்து செய்திருந்தது. இலாஹியின் மருத்துவச்சான்றிதழில் நெஞ்சுவலியால் அவதிப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதிலும் மோசடி செய்யப்பட்டதாக நீதிபதியால் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து எலாஹி, ஊழல் தடுப்பு போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் பிடிஐ தலைவர் தனது வீட்டில் இருந்து, தப்ப முயன்றபோது போலீசாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…