india [Imagesource : Outlook]
தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து 5,000 பாலஸ்தீன ராக்கெட்டுகள் மூலம், மத்திய கிழக்கில் உள்ள நாடான இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு போர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வந்த நிலையில், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டுள்ளது. இந்த போரை தொடர்ந்து, இஸ்ரேல் போர் நிலையை அறிவித்து, மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
இந்த போரை தொடர்ந்து, இஸ்ரேல் போர் நிலையை அறிவித்து, மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது. ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய நிலையில், ‘Operation Iron Sword’ என்ற பெயரில், பதுங்கியிருந்த ஹமாஸ் குழுவினர் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது.
இதனை தொடர்ந்து, ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய ராணுவம் வெளியேற வேண்டும் என்றும் ஹமாஸ் குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தனியாக இருப்பதை தவிர்த்து பாதுகாப்பு முகாம்களில் தங்க வேண்டும் என்றும், உள்ளூர் நிர்வாகம் வெளியிடும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறும், அவசர தேவைக்கு இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.
கம்சாட்கா : ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்திற்கு அருகே இன்று (ஜூலை 30, 2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில்…
சென்னை : பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சி தலைவர் ,விஜய் தலைமையில் வெற்றிபேரணியில்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்…
திருவாரூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, மடப்புரம் அஜித்குமார் (26) கொலை…
வாஷிங்டன் : ஜூலை 30, 2025: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20…
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…