Israel Hamas War [File Image]
இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஹமாஸ் அமைப்பு கடந்த மாதம் 7ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. அதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் , ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகரில் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். வான்வெளி தாக்குதல் முதல் தரை வழி தாக்குதல் என இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.
இஸ்ரேல் ராணுவ தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பினரும் பதில் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதனால், காசா நகரம் முழுவதும் போர் நகரமாக மாறிவிட்டது. இஸ்ரேல் ராணுவத்தின் நஹாஸ் காலாட்படை பிரிவினர் காஸாவில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
ஹமாஸின் பயங்கரவாதக் குழுவின் தளபதி வேல் அசெபா கொல்லப்பட்டார்.! ஐடிஎஃப்
அவர்கள் நேற்று, மசூதியில் மறைந்து இருந்த ஹமாஸ் படையினரை வான்வெளி படையினர் மூலம் வெளியில் வரவைத்து தாக்குதல் நடத்த முற்பட்டனர். ஆனால் ஹமாஸ் அமைப்பினர் அங்கிருந்து தப்பி சுரங்கப்பாதை வழியே வெளியேறினர்.
பின்னர், இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் மூலம், மருத்துவமனை பகுதியில் மறைந்து இருந்த ஹாமாஸ் தளவாடங்கள் மற்றும் பள்ளி வளாகங்களில் மறைந்து இருந்த ஹமாஸ் தளவாடங்களை இஸ்ரேல் ராணுவம் கன்னடறிந்து வான்வெளி தாக்குதல் நடத்தினர். இதில் ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்கள், ஏவுகணைகள் அழிக்கப்பட்டன. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் ராணுவம் மீது பதில் ஏவுகணை தாக்குதலை தொடர்ந்தனர்.
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 1400 பேரும், காசா நகரில் 9 அயிரத்திற்கும் மேலானோரும் உயிரிழந்து உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…