உலகம்

உலகில் முதல்முறையாக ரோந்து பணிக்கு Rolls Royce கார்.! மாஸ் காட்டும் மியாமி காவல்துறை.!

Miami Beach Police: ரோந்து பணிக்காக விலையுர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை மியாமி பீச் போலீஸ் அறிமுகப்படுத்துகிறது அமெரிக்காவில் சொகுசு கார்களை பார்ப்பது வழக்கமான ஒன்றாகும். ஆனால், இப்பொது அங்கிருக்கும் காவல்துறையினர் பயன்படுத்துவது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அட ஆமாங்க… உலகில் முதல்முறையாக அமெரிக்காவின் மியாமி நகர பீச் ஓர காவல் துறையினர், ரோல்ஸ் ராய்ஸ் என்ற மில்லியன் டாலர் மதிப்புள்ள சொகுசு காரை ரோந்து பணிக்கு ஈடுபடுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ மியாமி காவல்துறையால் […]

Braman Motors 3 Min Read
Miami police - Rolls Royce

ஆப்கானிஸ்தானில்திடீர் வெள்ளப்பெருக்கு.. 300 பேர் உயிரிழப்பு.!

Afghanistan Flooding : ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்ட நிலையில், அதில் சிக்கி உயிரிழந்தோரின் 300 ஆக உயர்ந்துள்ளது. வடக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருவதன் காரணமாக பாக்லான் மாகாணத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை பெய்த அதீத கனமழையால் காபூல், பஹ்லான் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இன்னும் பலரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. […]

#Afghanistan 3 Min Read
Afghanistan Floods

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு! 200 பேர் பலி!

Afghanistan Flooding : ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்ட நிலையில், அதில் சிக்கி 200 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருவதன் காரணமாக பாக்லான் மாகாணத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்னும் சிலர் காயமடைந்துள்ளார்கள். காயமடைந்தவர்கள் தற்போது  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், இந்த வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும்,  வெள்ளிக்கிழமை (மே 10) பெய்த கனமழைமழை வடகிழக்கு […]

#Afghanistan 4 Min Read
afghanistan flooding

பாலியல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்.. மகப்பேறு விடுப்பு.! பெல்ஜியத்தில் புதிய சட்டம்.!

பாலியல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் அளிக்கும் புதிய சட்டத்தை பெல்ஜியம் நாடு நிறைவேற்றியுள்ளது. உலகின் முதல் நாடாக, பாலியல் தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நல சட்டத்தை அமல்படுத்தி அங்கீகரித்துள்ளது பெல்ஜியம் அரசு. அந்நாட்டு அரசு கடந்த வார வெள்ளிக்கிழமை இதனை அந்நாட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இதில் 93 உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர். 33 பேர் எந்த முடிவும் தெரிவிக்கவில்லை. யாருமே இந்த சட்டத்தை எதிர்க்கவில்லை என்பதால் பாலியல் தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஐரோப்பாவின் […]

Belgian sex workers 7 Min Read
Belgium Govt has introduced a new law for Sex Workers

15 வயது சிறுவன் கொலையாளி என தீர்ப்பு ..! சக மாணவரை இதயத்தில் குத்தி கொன்ற கொடூரம் !!

Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 7-ம் தேதி 15 வயது சிறுவன் ஒருவர் மற்றொரு 15 வயது சிறுவனான ஆல்ஃபி லூயிஸைக் கொலை செய்த குற்றத்திற்காக குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது ஹார்ஸ்ஃபோர்த் அருகில் உள்ள தொடக்கப் பள்ளியை விட்டு வெளியேறும் போது சக மாணவர்கள் கண் […]

Alfie Lewis 6 Min Read
Alfie Lewis

சுவிட்சர்லாந்த்தில் அமலுக்கு வரும் புதிய சட்ட திருத்தம் ! புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக அடுத்த நடவடிக்கை!

Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே போல இதற்கு முன்னரும், சுவிட்சர்லாந்தில் தர்காலிகமாக வாழ்ந்து வருபவர்கள் (provisionally admitted foreigners) தங்களுடைய குடும்பங்களுடன் சேர்ந்து சுவிற்சர்லாந்தில் வாழ வேண்டும் என்றால் மூன்று ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என்று முதலில் அரசு நிறைவேற்றிய சட்டம் கூறியது. அதன் பிறகு ஐரோப்பாவின் மனித உரிமை நீதிமன்றம் அளித்த […]

Asylum 6 Min Read
Switzerland

உடல் எடையை குறைக்க விபரீத பயிற்சி.! 6 வயது குழந்தை உயிரிழந்த சோகம்.!

America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம். அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில் உள்ள ஒருவர் தனது ஆறு வயது மகன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓடுமாறு கட்டாயப்படுத்தினார். அந்த சிறுவன் ஒரு கட்டத்தில் ஓடி ஓடி களைத்து கிழே விழுந்தும், அதனை கண்டுகொள்ளத தந்தை மீண்டும் மீண்டும் ஓட வைத்துள்ளார். இதனையடுத்து, சில நாட்கள் கழித்து உடல்நலம் குறைவால் மருத்துவமனையில் […]

america 4 Min Read
New Jersey

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில் பாலஸ்தீனத்தின் காசா நகரில் ஹமாஸுக்கு எதிரான போரை நிறுத்தப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்து தாக்குதலை தொடர்ந்து வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர், இஸ்ரேல் தரப்பில் இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் மற்றும், ஹமாஸ் அமைப்பினர் வசம் இருக்கும் இஸ்ரேல் நாட்டினர் […]

#Gaza 4 Min Read
Israel PM Netanyahu

கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Covishield: கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாகவே பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர் உலக முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பறித்தது. கடந்த 2019ல் பரவ தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் இரண்டுகளாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பின்னர் கொரோனா வைரஸை ஒழிக்கவும், மேலும் பரவாமல் தடுக்கவும் உலக நாடுகள் பல்வேறு தடுப்பூசிகளை கண்டுபிடித்தன. அதில் இங்கிலாந்து […]

#Corona 5 Min Read
CoviShield

கென்யாவில் நிற்காத மழை! அணை உடைந்து 50 பேர் பலியான சோகம்!!

Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து வாங்குகிறது இதன் காரணமாக கென்யாவின் தலைநகரமான நைரோபி நகர் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. நைரோபியில் உள்ள ஒரு ‘மை மஹியூ’ கிராமத்திற்கு அடுத்துள்ள ஒரு டவுனில் அணை உடைந்து இந்த வெள்ளமானது ஏற்பட்டுள்ளது. மார்ச் மாதம் முதல் நிற்காமல் பெய்த கனமழையால் கென்யாவின் பழமையான அணையான ‘கிஜாப்’ அணை […]

Dam Broken 4 Min Read
Kenya Flood

லட்ச கோடி ரூபாய்… துபாயில் உலகின் பிரம்மாண்ட விமான நிலையம்.!

Dubai: உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவின் தாயகமான துபாய், உலகின் மிகப்பெரிய விமான நிலையத்தை உருவாக்குவது மூலம் அடுத்த உயரமான விஷயமாக பெருமை கொள்கிறது. ஆம், துபாயில் உலகின் மிகப்பெரிய விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது. அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் என்ற பெயரில், 26 கோடிப் பயணிகளை கையாளும் வகையில், ரூ. 2.9 லட்சம் கோடி செலவில் உருவாகிறது. 70 சதுர கி.மீ பரப்பளவில் 5 ஓடுபாதைகளுடன், 400 விமானங்கள் […]

Al Maktoum International Airport 4 Min Read
Sheikh Mohammed

மெக்சிகோ புனித யாத்திரையில் சாலை விபத்து… 14 பேர் உயிரிழப்பு.!

Mexico : மத்திய மெக்சிகோவில் புனித யாத்திரை சென்ற பேருந்து சாலை விபத்தில் சிக்கியதில் 14 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவில் உள்ள கிறிஸ்தவ மக்களுக்கு முக்கிய புனித தளங்களில் ஒன்றாக விளங்குகிறது தென்மேற்கில் உள்ள சல்மா கிறிஸ்தவ தேவாலயம். இந்த ஆலயத்திற்கு புனித யாத்திரையாக மத்திய மெக்சிகோ குவானாஜுவாடோ மாநிலத்தில் இருந்து அப்பகுதி மக்கள் பேருந்தில் புறப்பட்டனர். அந்த பேருந்தானது, கபூலின் – சல்மா தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வந்து கொண்டிருக்கும் வேளையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் […]

#Mexico 3 Min Read
Mexico Road Accident

மியான்மரில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.!

Earthquake : மியான்மரில் 4.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக NCS தெரிவித்துள்ளது. நேற்று (ஏப்ரல் 28) ஞாயிற்று கிழமை பிற்பகல் 2 மணியளவில் மியான்மர் நாட்டின் சீன எல்லை ஒட்டிய பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு மையமான NCS (National Center for Seismology) தகவல் தெரிவித்துள்ள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.2 என பதிவானதாக கூறப்பட்டுள்ளது. பூமத்திய அட்சரேகை 25.39 மற்றும் தீர்க்கரேகை 96.06 இல் நிலமட்டத்தில் இருந்து 7 கிலோமீட்டர் […]

#China 3 Min Read
Earthquake in Myanmar

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! அதிர்ச்சியில் ஆழ்ந்த மக்கள்!

Earthquake : இந்தோனேசியாவில் இருக்கும் தீவான ஜாவாவின் தெற்குப் பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருக்கும் தீவான ஜாவாவின் தெற்குப் பகுதியில் இன்று காலை 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்தனர். திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் எவ்வளவு பேருக்கு காயம் ஏற்பட்டது எவ்வளவு பொருள் சேதம் என்பதற்கான எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் பஞ்சார் நகருக்கு தெற்கே 102 […]

#Earthquake 4 Min Read
Indonesia earthquake

ஜப்பான் தீவில் நிலநடுக்கம்… 6.5 ரிக்டராக பதிவு.!

Earthquake : ஜப்பானில் போனின் தீவுகளில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் போனின் தீவு பகுதியில் இன்று (ஏப்ரல் 27) 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கடியில் 503.2 கிமீ (312 மைல்) தூரம் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. கடல் தீவு பகுதியில் ஏற்பட்டு இருந்தாலும், தற்போதைக்கு இந்த நிலநடுக்கம் குறித்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. […]

#Earthquake 3 Min Read
Japan Earthquake

ரெட் சீ பகுதியில் பயங்கர தாக்குதல் ! பஞ்சாப் வந்த வணிக கப்பலை தாக்கிய ஹவுதி படையினர் !!

Ship attack By Houthis : இந்தியாவை நோக்கி வந்த கொண்டிருந்த ஒரு வணிகக் கப்பலை ஹவுதி படை தாக்கி உள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் இஸ்ரேல்-ஈரான் போர் மற்றும் இஸ்ரேல்–காசா போர் என தொடர்ந்து ஒரு சில மாத காலமாக போர் பதற்றம் மிகுந்த அளவில் நிலவி வருகிறது. மேலும், காசா நாட்டின் மீதான இஸ்ரேலின் போருக்கு பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த போரை உடனடியாக நிறுத்த கோரியும் மேற்கொண்டு […]

Houthis 5 Min Read
Ship Attack

மூன்று விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பிய சீனா.. காரணம் என்ன?

China: சீனா தனக்கென சொந்தமாக உருவாக்கியுள்ள விண்வெளி நிலையத்திற்கு 3 விண்வெளி வீரர்களை 6 மாத பணிக்காக அனுப்பியுள்ளது. விண்வெளியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக ரஷ்யா உட்பட உலக நாடுகள் கூட்டாக இணைந்து சர்வதேச விண்வெளி மையத்தை ஏற்கனவே நிறுவியுள்ள நிலையில், அதன் ஆயுட்காலம் வரும் 2030ல் முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் சீனா ஒரு பயங்கரமான முயற்சியை மேற்கொண்டு தனக்கென சொந்தமான ஒரு தனி விண்வெளி நிலையத்தை விண்ணில் உருவாக்கி உள்ளது. சீனா உருவாக்கியுள்ள இந்த […]

#China 5 Min Read
Chinese astronauts

தான்சானியாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 155 பேர் பலி.!

East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 155 பேர் உயிரிழந்தனர். மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்து, 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தான்சானியா பிரதமர் காசிம் மஜலிவா, எல் நினோ தாக்கத்தால் பதிவான கனமழை மே மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதால், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான […]

#Flood 3 Min Read
East Africa le

வெள்ளத்தில் மூழ்கிய கென்யா..பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு.!

Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள சாலைகளில் வெள்ளக்காடாக மாறியுள்ளன. ஐ.நா வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, கென்யாவில் கனமழைக்கு இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். கென்யாவில் மார்ச் மாத இறுதியில் இருந்து கனமழை பெய்து வருகிறது. ஆனால் கடந்த வாரத்தில் பெய்த மழை தீவிரமடைந்துள்ள நிலையில், பெரிய வெள்ள அபாய ஏற்பட வழி வகுத்தது. […]

floods 3 Min Read
Kenya floods

100 மிஸ்டு கால்… பதறிய காதலன்.. ‘லவ் பிரைன்’ நோய் பாதித்த இளம்பெண்.!

Love Brain Disorder : சீனாவில் 18 வயதான கல்லூரி மாணவிக்கு ‘லவ் ப்ரைன்’ எனும் வித்தியாசமான நோய் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். சீன பத்திரிகையின் அறிக்கை  சீனாவில் உள்ள தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கிச்சுவான் எனும் மாகாணத்தில் வாழ்ந்து வருபவர் தான் சியாயு எனும் கல்லூரி மாணவி. இவர் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு தனது மேற்படிப்பிற்காக கல்லூரிக்கு சென்றுள்ளார். அங்கு கலோரியின் முதல் ஆண்டிலேயே  சக மாணவர் ஒருவரை  காதலித்தும் வந்துள்ளார். அந்த மாணவரும் சியாயு மீது […]

borderline personality disorder 8 Min Read
Love Brain