உலகம்

தீ பிடித்து எரிந்த பேருந்து! 18 பேர் உடல் கருகி பலி..13 பேர் படுகாயம்!

பாகிஸ்தானில் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நகரங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலையின் தோளில் நிறுத்தப்பட்டிருந்த வேனை மோதியதில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. பேருந்து 35 முதல் 40 பேர் வரை பயணிகளை ஏற்றிக்கொண்டு கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்து விபத்துக்குள்ளான சிறிது நேரத்திலேயே தீ விபத்துக்குள்ளானது என்று மாவட்ட அதிகாரி  கூறினார். டீசல் டிரம்ஸ் ஏற்றிச் சென்ற பிக்-அப் வேன் […]

3 Min Read
pakistan bus fire accident

உக்ரைன் டிரோன் தாக்குதலுக்கு ஒரே இரவில் பதிலடி கொடுத்த ரஷ்யா!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் ஓய்ந்த பாடில்லை, அவ்வப்போது தாக்குதல் சம்பவம் மாறிமாறி நடந்து கொண்டே தான் இருக்கிறது. சுமார், 500 நாட்களை கடந்தும் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், நேற்றைய தினம் உக்ரைன் ஆளில்லா விமானம் மூலம் ரஷ்யா வின் தலைநகரமான மாஸ்கோவில் உள்ள கட்டிடத்தின் மீது ஆளில்லா டிரோன் தாக்குதல் நடத்தியது. ஆனால், இந்த டிரோனை மாஸ்கோவில் அமைந்திருந்த வான்பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியது. இந்த […]

3 Min Read
Russia launches drone

மிஸ் யூ! உலகை விட்டு பிரிந்தது மீம்ஸ் அரசன் சீம்ஸ்! கண்ணீர் விடும் நெட்டிசன்கள்!

சமூக வலைதளங்களில் மீம்ஸ் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலாமான சீம்ஸ் என்று அழைக்கப்படும் ஷீபா இனத்தைச் சேர்ந்த பால்ட்சீ என்ற நாய் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளது. கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சீம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது. இந்நிலையில், மருத்துவர்கள் நேற்று காலை சீம்ஸுக்கு தோராசென்டெசிஸ் அறுவை சிகிச்சை செய்தனர். அந்த சிகிச்சையின் போதே சீம்ஸின் உயிர் பிரிந்தது. இதற்கு நெட்டிசன்கள் வருத்தத்துடன் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

2 Min Read
CheemsDeath

ஜார்ஜியா குற்றப்பத்திரிகை வழக்கில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சரணடைய வாய்ப்பு!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது 18 கூட்டாளர்களுக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் தானாக முன்வந்து சரaணடைய வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞர் ஃபானி வில்லிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த வாரம்  24 அல்லது 25 அன்று ஃபுல்டன் கவுண்டி சிறையில் சரணடைவார் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஜார்ஜியாவில் 2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயற்சித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். […]

3 Min Read
Donald Trump

ஹவாய் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 114 ஆக உயர்வு!

அமெரிக்க வரலாற்றில் மிகக் கொடியதாகக் கருதப்படும் ஹவாயின் மௌய் தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், பேரழிவுப் பகுதியில் மீட்பு பணி தொடர்ந்து தேடப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வியாழன் அன்று 111 ஆக இருந்த கொடிய காட்டுத்தீயில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது, 114 ஆக அதிகரித்துள்ளது என்று மௌய் காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், அதிபர் ஜோ பைடன் ஆகஸ்ட் 21 அன்று […]

2 Min Read
Hawaii wildfires

இந்தியாவும் நியூசிலாந்தும் வெலிங்டனில் 5வது வெளியுறவு அலுவலக ஆலோசனை

இந்தியாவும் நியூசிலாந்தும் வெலிங்டனில் நடத்திய 5வது வெளியுறவு அலுவலக ஆலோசனையில், இரு நாடுகளுக்கு இடையே உள்ள மேம்பட்ட ஈடுபாடு குறித்து திருப்தி தெரிவித்தனர். அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு பரிமாற்றங்கள், கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மக்கள் இடையேயான தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு உறவுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டது. கலாச்சார ஒத்துழைப்பு, ஜி-20, இந்தோ-பசிபிக், ஆசியான், காமன்வெல்த் மற்றும் ஐ.நா., ஆகிய நாடுகளின் இந்தியாவின் பிரசிடென்சி உட்பட பலதரப்பு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

2 Min Read
Ministry of External Affairs

எரிபொருள் விலையேற்றம்.. அத்யாவசிய பொருட்களின் விலையேற்றம்…  போராட்டத்தில் களமிறங்கிய பாகிஸ்தான் வணிகர்கள்.! 

பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக எரிசக்தி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக பாகிஸ்தான் வர்த்தகர்கள் நேற்று கராச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கராச்சி துறைமுகத்திற்கு அருகில் மேமன் மசூதிக்கு முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு வணிகர் கூட்டமைப்பினர் இந்த போராட்டத்தை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 வர்த்தக சங்கங்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் விலையேற்றம் தொடர்ந்தாலோ, பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்தாலோ போராட்டத்தை தொடரப்போவதாகவும் […]

3 Min Read
Pakistan Traders Protest

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு!

அமெரிக்கா, டென்மார்க் மற்றும் இஸ்ரேலில் புதிய வகை கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்படுள்ளது. இந்நிலையில், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி.) இந்த வைரசின் வீரியம் மற்றும் பரவலை கண்காணித்து வருவதாக தெரிவித்து உள்ளது. CDC is tracking a new lineage of the virus that causes COVID-19. This lineage is named BA.2.86, and has been detected in the United States, Denmark and Israel. CDC […]

3 Min Read
new corona variant

ஆளில்லா விமானம் மூலம் மாஸ்கோவை தாக்கிய உக்ரைன்!

உக்ரைன் ஆளில்லா விமானம் மூலம் மாஸ்கோவில் உள்ள கட்டிடத்தின் மீது வான்வழி தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், நகரின் வான்வெளி மூடப்பட்டதால், சிவில் விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்து சீர்குலைந்துள்ளது. இந்த தாக்குதல் இன்று அதிகாலை 4 மணியளவில் நடந்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் டெலிகிராமில் தெரிவித்துள்ளது. பின்னர், ரஷ்யாவின் வான் பாதுகாப்பு படையினர், தாக்குதல் நடத்திய ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் கூறியுள்ளார். இதனையடுத்து, இந்த […]

2 Min Read
central Moscow

ஆக 21 முதல் 24 வரை தென்னாப்பிரிக்கா செல்கிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்..!

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ள 15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொள்கிறார். இதன்பிறகு ஜின்பிங் தென்னாப்பிரிக்க குடியரசுத் தலைவர் சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில், ஆகஸ்ட் 21 முதல் 24 வரை தென்னாப்பிரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாகச் செல்கிறார் என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் தெரிவித்தார். தென்னாப்பிரிக்காவில் இருக்கும் போது, ஜனாதிபதி ஷி ஜின்பிங், சீன-ஆப்பிரிக்கா தலைவர்களின் பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி ரமபோசாவுடன் இணைந்து தலைமை தாங்குவார்.

2 Min Read
Xi Jinping

நிலவின் முதல் புகைப்படத்தை அனுப்பியது ரஷ்யாவின் லூனா-25 விண்கலம்!

ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்த பிறகு, நிலவின் மேற்பரப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அனுப்பியதாக அந்நாட்டின் மாநில விண்வெளி நிறுவனம் ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை போலவே, ரஷ்யாவும் நிலவின் தென் துருவத்திற்கு விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் களமிறங்கி, ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி ஆய்வு மையம், லூனா-25 எனும் விண்கலத்தை கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. விண்ணில் செலுத்தப்பட்ட லூனா-25யானது, வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி நிலவில் தரையிறங்கும் என […]

4 Min Read

தரையிறங்க முயன்ற விமானம்.! கீழே விழுந்து நொறுங்கியதில் 10 பேர் உயிரிழப்பு..!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் புறநகர்ப் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற தனியார் விமானம் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மீது மோதியதில் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் பயணம் செய்த 8 பேர் உட்பட சாலையில் சென்று கொண்டிருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு லங்காவி தீவில் இருந்து கோலாலம்பூருக்கு அருகில் உள்ள சுல்தான் விமான நிலையத்திற்கு விமானம் சென்று கொண்டிருந்ததாக அந்நாட்டின் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

2 Min Read
PlaneCrashed

தீ விபத்து குறித்து ஆய்வு செய்ய ஹவாய் செல்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் மனைவி ஜில் பைடன் ஆகியோர் அடுத்த வாரம் திங்கட்கிழமை ஹவாய் செல்கிறார்கள். சமீபத்தில், ஏற்பட்ட இந்த தீ விபத்தில் , 110 பேர் பலியாகினர். அங்கு நிலமையை ஆய்வு செய்ய ஹவாய் செல்லும் ஜோ பைடன், தீ விபத்தில் உயிர் பிழைத்தவர்கள் மற்றும் மத்திய, மாநில மற்றும் உள்ளூர் மட்டங்களில் உள்ள பல்வேறு அரசாங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்வார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

2 Min Read
Joe Biden and Jill Biden

உயிரோடு இருக்கும் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் குடும்பம்.? இலங்கை ராணுவ அதிகாரி கூறிய தகவல்.! 

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன், இலங்கை நாட்டிற்கு எதிராக உள்நாட்டு போரில் ஈடுபட்டிருந்த போது 2009ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டார். அவரது மனைவி, மகள், மகன் என அனைவரும் இந்த போரில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பிரபாகரனின் மனைவி மதிவதனியின் சகோதரி ஓர் அதிர்ச்சி தகவலை தெரிவித்து இருந்தார். அதாவது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதினி மற்றும் அவர்களது மகள் துவாரகா இன்னும் உயிருடன் இருப்பதாக அவர் கூறியிருந்தார். மதிவதியின் இந்த கூற்றை […]

3 Min Read
LTTE Leader Prabakaran Family

நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு சென்ற லூனா-25.! தென்துருவ பயணத்தில் சந்திராயனை பின்தொடரும் ரஷ்யா.!

நிலவின் தென் துருவத்தை அடைய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கிய சந்திரயான்-3 விண்கலமானது கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சந்திராயன்-3 விண்கலமானது, பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து, நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு சென்று , அதன் சுற்றளவு குறைக்கப்பட்டு, தற்போது இறுதி கட்ட பாதையில் சந்திராயன்-3 செலுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து லேண்டர் பகுதி இன்று […]

4 Min Read
Russia's Luna-25

டொமினிகன் குடியரசு நாட்டில் வெடி விபத்து: 11 பேர் பரிதாபமாக பலி!

டொமினிகன் குடியரசு நாட்டின் தலை நகரத்தில் வெடி விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர், மேலும் 10 பேர் காணவில்லை என்றும், 50கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று ஜனாதிபதி லூயிஸ் அபினாடர் செவ்வாயன்று தெரிவித்தார். டொமினிகன் குடியரசு தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சான் கிறிஸ்டோபலின் வணிகப் பகுதியை வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 11 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 59 பேரில் 37 […]

2 Min Read
Dominican Republic - explosion

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உட்பட 18 பேருக்கு பிடி வாரண்ட்..!

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது 18 கூட்டாளர்களுக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் தானாக முன்வந்து சரணடைய வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞர் ஃபானி வில்லிஸ் தெரிவித்துள்ளார். ஜார்ஜியாவில் 2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயற்சித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். அவருடன் 18 கூட்டாளிகளும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகளில் போலி ஆவணங்களைச் சதி செய்தல், பொய்யான ஆவணங்களைத் தாக்கல் செய்தல் ஆகியவை அடங்கும்.

2 Min Read
Donald Trump

லிபியாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல்! 27 பேர் உயிரிழப்பு..106 பேர் காயம்1

லிபிய தலைநகர் திரிபோலியில் ஆயுதமேந்திய இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. லிபியாவில் 444 படைப்பிரிவின் தளபதி மஹ்மூத் ஹம்சா, தலைநகர் திரிபோலியின் முக்கிய மிட்டிகா விமான நிலையம் வழியாக பயணிக்க முயன்றபோது தடுத்து வைக்கப்பட்டதை அடுத்து, இரு பிரிவினருக்கு இடையே மோதல் தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல், 444 படைப்பிரிவின் தளபதி மஹ்மூத் ஹம்சாவை சிறப்புத் தடுப்புப் படை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், […]

4 Min Read
Libya clashes

பாகிஸ்தானில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுகொள்ளப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவ ஊடகப் பிரிவான ஐஎஸ்பிஆர், நேற்று இரவு பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்ததும், பாதுகாப்புப் படையினர் அங்கு சென்றதாக தெரிவித்துள்ளது. இதன்பிறகு, பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர், துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளையும் மீட்கப்பட்டுள்ளது.

2 Min Read
Terrorists

நான் ஒரு ஹிந்துவாக இங்கே வந்துள்ளேன்.! இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பேச்சு.!

லண்டன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆன்மீகத் தலைவர் மொராரி பாபுவின் ராமாயண சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான இந்துக்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அவர்களும் கலந்துகொண்டார் இந்த விழாவில் கலந்துகொண்டது குறித்து,ரிஷி சுனக் கூறுகையில், நான் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இங்கு வரவில்லை . நான் ஒரு இந்துவாக கலந்துகொண்டேன். இந்திய சுதந்திர தினவிழாவில் , இந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்றது எனக்கு கிடைத்த கௌரவம் எனவும் ரிஷி சுனக் […]

2 Min Read
UK President Rishi Sunak