whatsapp heart emoji [file image]
குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரண்டு இஸ்லாமிய நாடுகளில், இப்போது, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு இதய ஈமோஜியை (Heart) அனுப்பினால், இனி 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என இரு நாட்டு அரசுகளும் ஒரு புதிய சட்டத்தை கொண்டுவந்துள்ளனர்.
கடந்த ஜூலை 30-ம் தேதி குவைத் வழக்கறிஞர் ஹயா அல்-ஷல்ஹியின் கூற்றுப்படி, இந்த குற்றத்திற்காக குற்றவாளிக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 2000 தினார் இந்திய மதிப்பில் (ரூ.5,35,584) அபராதம் விதிக்கப்படும்.
இதேபோல், சவுதி சைபர் கிரைம் நிபுணரின் கூற்றுப்படி, வாட்ஸ்அப்பில் சிவப்பு இதயங்களை அனுப்புவது துன்புறுத்தலாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், அங்கு வாட்ஸ்அப்பில் ‘ரெட் ஹார்ட்’ எமோஜிகளை அனுப்பினால், இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ. 1 லட்சம் ரியால் அதாவது இந்திய மதிப்பில் (21,92,588) அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சவுதி அரேபியாவில், யாராவது மீண்டும் மீண்டும் இந்த குற்றத்தை செய்தால், ஐந்து ஆண்டுகள் தண்டனையும், அபராதம் 3 லட்சம் ரியால் அதாவது இந்திய மதிப்பில் (66 லட்சம்) அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…