Israel [Image Source : AFP]
தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து 5,000 பாலஸ்தீன ராக்கெட்டுகள் மூலம், மத்திய கிழக்கில் உள்ள நாடான இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு போர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் காசா மீது இஸ்ரேல் முற்றுகையைத் தொடங்கியது.
அதன்படி, காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வருகிறது. இதுவரை நான்கு முறை போர் நடந்ததாக கூறப்படும் நிலையில், காசா பகுதி வழியாக பாலஸ்தீன தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதன்பிறகு முற்றுகையிடப்பட்ட காசாவின் பல இடங்களில் இருந்து சுமார் 5,000 ராக்கெட்டுகள் சரமாரியாக ஏவப்பட்டதாகவும், இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. காசாவில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்டதை அடுத்து இஸ்ரேல் போர் நிலையை அறிவித்துள்ளது. இதனால் மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், கடந்த மே மாதம், இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் மற்றும் காசா ராக்கெட் தாக்குதலில் 34 பாலஸ்தீனியர்கள் மற்றும் ஒரு இஸ்ரேலியர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை குறைந்தது 247 பாலஸ்தீனியர்கள், 32 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் போராளிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனிய அதிகாரிகளும் அடங்குவர்.
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…
லார்ட்ஸ் : லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்…
சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…