சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட தமிழர்..! என்ன காரணம்..?

Default Image

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி 9 ஆண்டுகளாக சிறையில் இருந்த தமிழர் தங்கராஜு தூக்கிலிடப்பட்டார். 

தமிழகத்தை சேர்ந்தவர் தங்கராஜ் சுப்பையா(46). இவர் சிங்கப்பூரில் வசித்து வந்த நிலையில், மலேசியாவில் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை கடத்த திட்டமிட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, 2013 ஆம் ஆண்டு சிங்கப்பூர் நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.

சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட தமிழர் 

 2018-ஆம் ஆண்டு அந்த நாட்டின் சட்ட விதிகளின் படி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2019-ஆம் ஆண்டு அவருக்கு வழங்கிய தண்டனையை குறைக்க கோரி தாக்கல் செய்த மனுவை அந்நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலையிலும் அந்நாட்டின் சாங்கி சிறையில் தங்கராஜ் தூக்கிலிடப்பட்டார்.

thangaraj mother

கடந்த 9 ஆண்டுகளாக அவர் சிறையில் இருந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு பின் தங்கராஜை  பார்ப்பதற்காக வந்த தாயாருக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், மறுநாளே அவர் தூக்கிலிடப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரை பொறுத்தவரையில் போதைப் பொருள் கடத்தலை தடுப்பதற்காக கடுமையான சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிங்கப்பூரில், கடந்த ஆறு மாதங்களில் நாட்டில் வழங்கப்பட்ட முதல் மரண தண்டனை இது என்பது குறிப்பிடத்தக்கது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்