Pak SuicideAttack [FileImage]
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் 35 பேர் பலி என தகவல்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், இன்று கட்சிக்கூட்டத்தில் (ஜமியத் உலமா-இ-இஸ்லாம்-ஃபஸ்ல் (JUI-F) தொழிலாளர் மாநாட்டில்,) தற்கொலைப்படை தாக்குதல் குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் 35 பேர் உயிரிழந்திருக்கலாம் மற்றும் 200 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஜியோ (GEO) நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட முக்கிய JUI-F தலைவர்களில் மௌலானா ஜியாவுல்லாவும் உள்ளடங்குவதாக பாகிஸ்தானில் இயங்கிவரும் ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது, மேலும் JUI-F தலைவரின் உரையின் போது மாலை 4 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் இது தற்கொலை தாக்குதல் என்று அறியப்பட்டுள்ளது என இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (ஐஜிபி) அக்தர் ஹயாத் கான் தெரிவித்தார். மேலும் வெடிகுண்டு குறித்த ஆதாரங்களை சேகரிக்க விசாரணைக்குழு இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டறிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…