Vacharaesorn [Image source : Inshorts]
தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் இரண்டாவது மூத்த மகனான வச்சரேசோர்ன் விவச்சரவோங்சே, 27 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனது தாயகம் திரும்பியுள்ளார்.
நியூயார்க்கில் உள்ள ஒரு சட்ட நிறுவனத்தில் பணிபுரியும் வச்சரேசோர்ன், தனது தாயகம் வந்தவுடன் அரச குடும்பத்தால் ஆதரிக்கப்படும் ஆதரவற்ற குழந்தை பராமரிப்புக்கான அறக்கட்டளைக்குச் சென்று, அங்குள்ள அனைவரிடமும் நலம் விசாரித்தார்.
பிறகு, 2016ம் ஆண்டு இறந்த தனது தந்தை மற்றும் அவரது தாத்தா மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் ஆகியோரின் உருவப்படங்களுக்கு முன்னால், ஜீன்ஸ் மற்றும் சாதாரண கருப்பு சட்டை அணிந்து, புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதன்பிறகு பாங்காக் அறக்கட்டளையில் செய்தியாளர்களிடம் பேசிய வச்சரேசோர்ன், 27 ஆண்டுகளாக தாய் நாட்டைவிட்டு வெளியே இருந்த நான், இப்போது திரும்பி வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன், மீண்டும் வருவது ஒரு கனவு போல இருக்கிறது என்று கூறியுள்ளார்.
வச்சரேசோர்ன் திரும்பியதைக் கண்டு பல தாய்லாந்து மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். இதற்கிடையில் மன்னரின் 44 வயதான மூத்தமகள், இளவரசி பஜ்ரகித்தியபா நரேந்திரா தேப்யவதி, கடுமையான இதய நோய் காரணமாக கோமா நிலையில் உள்ளார் என்பது குறிப்பித்தக்கது.
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…