Madagascar Stadium death [File Image]
மடகாஸ்கர் தலைநகர் அன்டனானரிவோவில் உள்ள பரியா மைதானத்தில் இந்தியப் பெருங்கடல் தீவு விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக சுமார் 50,000 பார்வையாளர்கள் கூடியிருந்த பரியா மைதானத்தின் நுழைவாயிலில் நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 13 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
விழாவின் போது தொடக்க விழாவில் கலந்து கொண்ட மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த அழைப்பு விடுத்தார். பிறகு திடீரென கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதத்தால் இந்த அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது. கூட்ட நெரிசலின்போது தொலைந்து போன பொருட்களில் குவிந்திருந்த மக்கள் தங்கள் காலணிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் போது நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்கள்.
இந்த சோகமான சம்பவத்தில் “இதுவரை 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்ததாகவும் 107 பேர் காயமடைந்துள்ளனர்” எனவும் எதிர்க்கட்சி எம்பி ஹனித்ரா ரசாபிமானன்சோவா உள்ளூர் வானொலி நிலையத்தில் தெரிவித்தார். காயம் அடைந்த அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும், கிட்டத்தட்ட சுமார் 28 மில்லியன் மக்கள் வசிக்கும் தீவின் மிகப்பெரிய பரியா ஸ்டேடியம் கடந்த 2019-ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு பேரழிவை சந்தித்தது. நாட்டின் தேசிய விடுமுறையின் போது ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியின் போது குறைந்தது 16 பேர் உயிரிழந்தார்கள் பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…