Categories: உலகம்

அமெரிக்காவில் 198 பயணிகளுடன் சென்ற ரயில்..! லாரி மீது மோதி தடம் புரண்டு விபத்து..!

Published by
செந்தில்குமார்

அமெரிக்காவில் சுமார் 198 பயணிகள் மற்றும் 13 பணியாளர்களுடன் சென்ற ரயில், தண்ணீர் லாரி மீது மோதி தடம் புரண்டது.

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் 198 பயணிகள் மற்றும் 13 பணியாளர்களுடன் சென்ற ஆம்ட்ராக் ரயில், தண்ணீர் லாரி மீது மோதியுள்ளது. இந்த மோதலில் ரயிலில் உள்ள 7 பெட்டிகளில் 3 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டுள்ளது.

ஆம்ட்ராக் ரயில் சியாட்டிலில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​காலை 11:15 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதனையடுத்து மீட்பு துறையினர் ரயிலில் இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

இந்த விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர் உட்பட ரயிலில் பயணம் செய்தவர்களில் 14 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது, இந்த விபத்து குறித்து உள்ளூர் அதிகாரிகள் முழு விசாரணையை நடத்தி வருகின்றனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

2 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

2 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

4 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

4 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

5 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

5 hours ago