வாரம் ஒரு திமுக அமைச்சருக்கு எதிராக ஊழல் வழக்கு வந்து கொண்டிருக்கிறது – அண்ணாமலை

Annamalai

செந்தில் பாலாஜியை கோபாலபுரத்து குடும்பம் காப்பாற்றுவதைப் போல, அமைச்சர் பொன்முடியையும் காப்பாற்றப்படுவாரா..? என அண்ணாமலை  கேள்வி.

2006 – 2011 திமுக ஆட்சியில், செம்மண் குவாரிகளில் அளவுக்கு மகன் 6 அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரின் மகன் கெளதம சிகாமணி,உறவினர் ஜெயச்சந்திரன் ஆகியோர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கௌதம சிகாமணி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதுஅக்குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கருது பதிவிட்டுள்ளார்.

அதில், அலமாரியில் இருந்து வெளியேறும் எலும்புக்கூடுகள் போல, திமுக அமைச்சர்கள் ஒவ்வொரு வாரமும் ஊழலை அம்பலப்படுத்தி வருகின்றனர். 2006-11ல் சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அரசுக்கு ரூ.28.4 கோடி நிதி இழப்பு ஏற்படுத்தியதாக அவரை முதலமைச்சர் ஸ்டாலின் பதவி நீக்கம் செய்ய வேண்டும். மாறாக, செந்தில் பாலாஜியை கோபாலபுரத்து குடும்பம் காப்பாற்றுவதைப் போல, அமைச்சர் பொன்முடியையும் காப்பாற்றப்படுவாரா..?’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்