அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வழக்கு – உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Madras High court

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சியின் போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி மணிமேகலை மீதும் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த நிலையில்,  இந்த வழக்கில்  இருந்து தன்னை விடுவிக்குமாறு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில்,  அமைச்சர் தங்கம் தென்னரசு மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்  அவரையும் அவர்கள் மனைவியையும் வழக்கிலிருந்து விடுவித்து  உத்தரவிட்டிருந்தது.

அதேபோல் 2006-2011 ஆம் ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது.   இதனையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவியை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டதற்கு, எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்