காலை உணவு திட்டத்தால் என் மனம் நிறைந்துள்ளது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் திட்டத்தை, கலைஞர் படித்த திருக்குவளை பள்ளியில் உணவு பரிமாறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவ மாணவியருடன் கலந்துரையாடியபடி உணவருந்தினார்.
தமிழ்நாட்டில் உள்ள 31,008 தொடக்க பள்ளிகளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது; இதன்மூலம் 15.75 லட்சம் மாணவர்கள் பயனடைவர்கள். இந்த நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் படித்த பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைப்பதில் கலைஞரின் மகனாக பெருமை அடைகிறேன். காலை உணவு திட்டத்தால் என் மனம் நிறைந்து மகிழ்கிறது.
பலரது மகிழ்ச்சிக்கு நான் காரணமாக இருப்பதால், எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எந்த காரணமும் கல்வி கற்க தடையாக இருக்க கூடாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோர் என்பர். அந்த வகையில் திமுக உயிர் கொடுத்துள்ளது. உதவ யாருமில்லை என கண் கலங்கும் மக்களுக்கு திமுக உறுதுணையாக இருக்கிறது.
கல்வி கற்க எதுவும் தடையாக இருக்க கூடாது. காலை உணவு மிக மிக முக்கியம்; காலை உணவு இல்லை என்றால் எப்படி கல்வி கற்க முடியும். பசியோடு வருபவர்களை பட்டினியாக வைத்து பாடம் சொல்லி கொடுக்ககூடாது என்பதற்காகவே இத்திட்டம் நீதிகட்சி ஆட்சியில் மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டது; 1971ம் ஆண்டு திமுக ஆட்சியில் ஊட்டச் சத்து வழங்கும் திட்டமாக மாற்றினார் கருணாநிதி .
ஒடுக்கப்பட்டோரின் பிள்ளைகள் பள்ளி சென்று கல்வி பெற எதுவும் தடையாக இருக்க கூடாது அரசுப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க வேண்டும். மாணவர்கள் இளைஞர்களுக்கு பாடமாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உள்ளார். காலை உணவு திட்டத்திற்கானது நிதி ஒதுக்கீடு அல்ல, நிதி முதலீடு.
அண்ணா, பெரியார், கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் தடத்தை பின்பற்றி நடக்கிறேன். படிப்புக்காகவும், வேலைக்காகவும், பேருந்தில் செல்லும் சகோதரிகள் கட்டணமில்லாமல் விடியல் பயணத்தை மேற்கொள்ளும்போதும், உயர்கல்வி பெறும் அரசு பள்ளி மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் 1000 பெறும்போதும்,
அவர்களைவிட எனக்குதான் அதிகமான மகிழ்ச்சி.