mkstalin [FILE IMAGE]
சென்னை கோட்டூர்புரத்தில், இஸ்ரோவின் தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கான பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், தமிழனாக பிறந்த பெருமையை இன்று அடைந்துள்ளேன். இந்த மேடையில் நிற்பதை நான் பெருமையாக கருதுகிறேன். இஸ்ரோ விஞ்ஞானிகள் சிவன், மயில்சாமி அண்ணாதுரை பிறந்த மண் தமிழ்நாடு. விஞ்ஞானி வீரமுத்துவேலின் பணி பெருமைக்குரியது. ஆகஸ்ட் 23 உலகத்திற்கே முக்கியமான நாள்; உலகத்தையே வியக்க வைத்த விஞ்ஞானிகள் தமிழ்நாட்டில் உள்ளனர்.
திண்ணை பள்ளியில் படித்து விண்ணை தொட்டவர் மயில்சாமி அண்ணாதுரை. இந்த நாட்டில் ஏன் ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன் உருவாகவில்லை என அப்போது கேட்டவர் அண்ணா அதனால், அவர் பெயரிலான இந்த அரங்கில், விஞ்ஞானிகளான உங்களை அழைத்து பாராட்டுவதே சிறந்தது.
இஸ்ரோ விண்வெளி திட்டங்களில் முத்திரை பதித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு தலா ₹25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். 7.5% ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் படிக்கும் 9 மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானி என்ற பெயரில் உதவித்தொகை வழங்கப்படும்.
தமிழர்களின் வானியல் அறிவு தனித்துவமானது. விருப்பு வெறுப்பற்ற வகையில் அறிவியலை பின்பற்றுபவர்கள். இந்தியாவின் பக்கம் உலகத்தையே பார்க்க வைத்த விஞ்ஞானிகள் இங்கு அமர்ந்திருக்கின்றனர். நிலவை தொட்ட நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
சந்திராயன் – 3 திட்டம் வெற்றியை தொடர்ந்து தமிழக விஞ்ஞானிகள் பற்றிய செய்தி கொடிகட்டி பறந்தது. வீரமுத்து தமிழர்கள் சார்பில் வடிகட்டி பறப்பது தமிழகத்திற்கு பெருமை. தமிழக விஞ்ஞானிகள் 9 பேரில், 6 பேர் அரசு பள்ளியில் படித்தவர்கள் என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
சென்னை : அனைத்து வகையான சேமிப்புக் கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்காத காரணத்துக்காக வசூலிக்கப்பட்டு வந்த அபராதம் இப்பொழுது ரத்து…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…
சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…