தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் மழைக்கான வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்ககடலில் புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ளதால் 25ம் தேதிவரை தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்றும், வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், அய்யம்பேட்டை, கபிஸ்தலம், திருக்கருகாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஒருமணி […]
தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் இன்று மாலை முதல் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் இன்று மாலை முதல் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. கனமழை நாளைவரை நீடிக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் […]
தென்கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தென்தமிழகத்தில் இன்றும் , நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இரண்டு நாள்களுக்குப் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் நேற்று வரை, 422 புள்ளி 3 […]
வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு வங்க கடலில் உருவான பெய்ட்டி புயல், ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடந்தது. தற்போது அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக் குறைந்துள்ளது. இதற்கிடையே தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை […]
தமிழகத்தில் நாளை முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலளித்துள்ளது.
பெய்ட்டி புயல் இன்று காக்கிநாடா கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்த்து 320 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள பெய்ட்டி புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. இது 23 கீ.மீ வேகத்தில் ஆந்திராவை நோக்கி நகர்கிறது. இந்த புயல் இன்று மாலை வலுவிழந்து காக்கிநாடா கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலளித்துள்ளது.
ஆந்திராவை நோக்கி நகரும் பெய்ட்டி புயல், வட தமிழகத்திற்கு மழையைக் கொடுக்காது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயல் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே திங்கள் கிழமை பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று கூறியுள்ளார். பெய்ட்டி புயலால் முதலில் வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது மழைக்கு […]
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுவடைந்துள்ளதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுவடைந்துள்ளதாக தெரிவித்தார். புயலுக்கு பெய்ட்டி என பெயரிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி ஆந்திராவின் மசூலிப்பட்டினம் – […]
வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுவதால், வடதமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் காற்றுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறுவதாகவும், இது தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 930 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திராவின் மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே ஆயிரத்து […]
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரப் புயல் சின்னமாக மாறி, ஆந்திராவை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று புயலாக மாறி ஆந்திரா நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு ஆயிரத்து 140 கிலோ மீட்டர் தொலைவில் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வட தமிழகம் – ஆந்திரா நோக்கி […]
அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்க கடலில் புயல் உருவாகும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி வடமேற்கு திசையில் 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதால், தாழ்வு நிலையானது அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரம் பெற்று, 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழக கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வாடா தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 13 மற்றும் 14ம் தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தெற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்ததா நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்றும், ஆழ்கடலில் தொழில் செய்யும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் மத்தியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் மத்தியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும், இதனால் அடுத்த மூன்று நாட்களுக்கு வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே […]
இந்திய பெருங்கடல், தென்மேற்கு வங்க கடலில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வாங்க கடலில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. வாங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் காணப்படுவதாக கூறியுள்ளார். இதனால், சென்னையில் மேகம் வான மூட்டத்துடன் காணப்படும் என்றும், மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நாளை முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. இதையொட்டி அடுத்த மூன்று நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் நாளை முதல் மூன்று தினங்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல […]
தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையும் ஒரு சில […]