நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து இம்மாதம் அவர் அதிபராக பதவி ஏற்க உள்ளார். அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது . அதற்கிடையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் (அந்நாட்டு எம்பிகள்) உறுப்பினர்கள் பதவியேற்று வருகின்றனர். நேற்று (ஜனவரி 3) அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இருந்து 6 இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர்கள், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் பதவி ஏற்றனர். […]
அமெரிக்கா: ஹே சிரி… இதை செய், ஹே சிரி… அதை செய்… என சொல்லலும் ஆப்பிள் சொந்தகாரர்கள் அந்த சாதனத்தில் இருக்கும் டிஜிட்டல் அசிஸ்டன்ட் என்று சொல்லப்படும் ‘ஹே சிரி’-க்கு அடிமையானவர்களுக்கு இது ஒரு கேட்ட செய்தி என்றே சொல்ல வேண்டும். அதாவது, ஆண்ட்ராய்டு போன்களில் இருக்கும் ‘ஹே கூகுளை’ போல், ஆப்பிள் போன்களில் ‘ஹே சிரி’ (Siri) என்ற தனிப்பட்ட அம்சம் உள்ளது. இது நாம் என்ன கேட்கிறோமோ அதற்கு விளக்கம் கொடுக்கும். இந்த நிலையில், […]
அமெரிக்கா : நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக போர்பன் ஸ்ட்ரீட் பகுதியில் மக்கள் ஆட்டம் பட்டத்துடன் புத்தாண்டை கொண்டாடி கொண்டு இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கும் வகையில், வேண்டுமென்றே பிக்கப் டிரக்கை ஒரு நபர் வேகமாக அந்த பகுதியில் ஒட்டி கொண்டு அங்கிருந்தவர்கள் மீது மோதினார். கூட்டத்துக்குள் காரை மோதவிட்டு அதில் இருந்து இறங்கி மர்ம நபர், மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை சம்பவ நடந்த இடத்தில் நேரில் பார்த்த […]
நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 10 பேர் பலியாகினர், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கூட்டத்துக்குள் காரை மோதவிட்டு அதில் இருந்து இறங்கி மர்ம நபர், மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை சம்பவ நடந்த இடத்தில் நேரில் பார்த்த நபர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாக அந்நாட்டு செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நியூ […]
2025 : உலகில் சூரியன் உதிக்கும் நேரத்தை கணக்கிட்டு அனைத்து நாடுகளிலும் அன்றைய நாள் ஆரம்பிக்கிறது. இதனால், மணிநேரம் என்பது சூரியன் உதிப்பதை பொறுத்து ஒவ்வொரு நாட்டிலும் மாறுபடும். அவ்வாறு கணக்கிட்டு பார்த்தல், 2025ஆம் ஆண்டை முதன் முதலாக வரவேற்ற நாடாக மத்திய பசுபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள கிரிபாட்டி (தீவுகள்) நாடு இடம்பிடித்தது. இந்திய நேரப்பபடி நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு கிரிபாட்டி தீவுகளில் புத்தாண்டு பிறந்தது. அதேபோல, கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடாக அமெரிக்க […]
நியூசிலாந்து : உலகத்தில் உள்ள அணைத்து மக்களுக்கும் ஆங்கில புத்தாண்டை கொண்டாட தயாராகி உள்ளனர். நம்மூரில் இன்று இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டு பிறந்த சரியாக 12 மணிக்கு நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில், சின்னமான ஸ்கை டவரில் வாணவெடிகள் வெடித்து மக்கள் கீழே கொண்டாடினார்கள். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரமிக்க வைக்கும் வானவேடிக்கை காட்சி காண்போரை திகைக்க வைத்தது. […]
கிரிபாட்டி: உலகமே 2025ஆம் ஆண்டை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், உலகின் முதல் நாடாக பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி (Kiribati) எனும் கிறிஸ்துமஸ் தீவில் (Christmas Island) புத்தாண்டு பிறந்தது. அங்கு 2024-ம் ஆண்டு நிறைவடைந்து, தற்பொழுது 2025ம் ஆண்டு பிறந்திருக்கிறது. இந்நிலையில், பட்டாசு வெடித்தும், ஆட்டம் பாட்டத்துடன் ஆகிய புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர் கிரிபாட்டி மக்கள், இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த தீவு இந்தியாவை விட துல்லியமாக 8.5 மணி நேரம் முன்னால் […]
அடிஸ் அபாபா : எதியோப்பியா நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தெற்கு சிடமா மாநிலத்தில் உள்ள போனோ பகுதியில் (தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து 300கிமீ தொலைவில்) உள்ள ஆற்று பாலத்தில் நேற்று ஒரு கோர விபத்து ஏற்பட்டு 66 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போனோ பகுதியில் நடைபெற இருந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்காக திருமண வீட்டார், ஒரு டிரக்கில் (லாரி) சென்றுகொண்டிருந்தனர். அப்போது, கெலன் பாலத்தில் டிரக் கட்டுப்பாட்டை […]
முவான் : நேற்று (டிசம்பர் 29) காலையில் தாய்லாந்து நாட்டில் இருந்து புறப்பட்டு வந்த ஜேஜூ விமான நிறுவனத்தின் போயிங் 737-800 என்ற விமானம் தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஏற்பட்ட இடர்பாடுகளால் விமானம் பெரும் விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் மொத்தம் 175பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் பயணித்துள்ளனர். இந்த கோர விபத்தில் விமானம் முழுவதும் எரிந்து சேதமானது. இதனால் தீயணைப்பு துறையினர் மீட்புப்பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர். விமானத்தில் பயணித்த […]
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளை சபைகளை கொண்டு உலகளவில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கி வளர்ந்துள்ளது. இச்சபையின் மூலம், மதத் தலைவர்களுக்கான 115வது பட்டமளிப்பு விழாவானது கடந்த அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவானது முதலில் தென் கொரியாவில் இம்ஜிங்காக் அமைதிப் பூங்காவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக அந்நாட்டு பண மதிப்பீட்டில் சுமார் […]
முவான் : தென் கொரியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனமான ஜேஜூ (Jeju) விமான நிறுவனத்தின் 7C2216 என்ற விமானமானது இன்று (ஞாயிற்று கிழமை) 175 பயணிகள், 6 விமான ஊழியர்களுடன் தாய்லாந்து நாட்டில் இருந்து தென் கொரியாவின் முவான் (Muan ) விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. அப்போது ஓடு பாதையில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி விமான நிலைய தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இந்த […]
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி (டிச,25ம் தேதி) அன்று காலமானார் என்று ஜப்பானின் சுசூகி மோட்டார் நிறுவனம் (டிச.27) தெரிவித்துள்ளது. இவர், எளிய மக்களும் பயன்பெறும் வகையில் மாருதி 800 மாடல் காரை அறிமுகம் செய்து ஆட்டோமொபைல் உலகில் புரட்சியை ஏற்படுத்தியவர். ஒசாமு சசுசூகி, மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட்டின் இயக்குநராகவும், கௌரவத் தலைவராகவும் இருந்தார். தற்பொழுது, […]
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கின்றனர் என்று இலங்கை அரசு குற்றம் சாட்டுவதும், பிறகு இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதும் தொடர்கதையாகி கொண்டே இருக்கிறது. அண்மையில் இலங்கை அதிபர் டெல்லி வந்த போது கூட, பிரதமர் மோடி இலங்கை அதிபரிடம் இந்திய மீனவர்கள் பிரச்சனை குறித்து எடுத்துரைத்தார். மீனவர்கள் சுருக்கும்டி வலைகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். அதனால், கடல் […]
கஜகஸ்தான்: நாட்டில் ஏர்லைன்ஸின் பாகு-க்ரோஸ்னி விமானம் மேற்கு கஜகஸ்தானின் அக்டாவ் அருகே அவசரமாக தரையிறக்க முயற்சி செய்தபோது தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 72 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக முதற்கட்டமாக தகவல்கள் வெளியானது. விபத்து சம்பவத்தை தொடர்ந்து, உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு இதனை பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இப்பொது, மீட்பு […]
கஜகஸ்தான்: கஜகஸ்தானில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அஜர்பைஜான் ஏர்லைன்ஸூக்கு சொந்தமான அந்த விமானம், ரஷ்யாவின் செச்சினியாவில் உள்ள பாகுவிலிருந்து க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்தது. க்ரோஸ்னியில் நிலவி வரும் பனிமூட்டம் காரணமாக 3 இடங்களில் தரையிறங்க முடியாமல் விமானம் திருப்பிவிடப்பட்ட நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 72 பேருடன் சென்றகொண்டிருந்த அஜர்பைஜான் ஏர்லைன்ஸின் Embraer E190AR என்கிற விமானம் கஜகஸ்தானின் அக்டோவில் தரையிறங்கும் போது, வெடித்துச் […]
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நள்ளிரவில் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே இஸ்ரேல் – பாலஸ்தீன், ரஷ்யா – உக்ரைன் ஆகிய நாடுகள் சண்டையிட்டு வரும் வேளையில் நேற்றைய தினம் பாகிஸ்தானின் இந்த தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்றுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் இப்பொது வரை ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அதாவது பாகிஸ்தான் […]
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அவசர நடவடிக்கையாக, 1,200 சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர். இதனால், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை ஏற்பட்ட இந்த தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து, தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்க போராடி மதியம் பொழுதில் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. முதற்கட்ட […]
கராச்சி : பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு அவர் சிறையில் இருக்கிறார். அவரை விடுவிக்க வேண்டும் என அந்நாட்டில் அவரது ஆதரவாளர்கள் முதல் பன்னாட்டு அரசியல் தலைவர்கள் பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த 2023, மே 9ஆம் தேதியன்று, இம்ரான் கானை விடுவிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவரை கைது செய்த பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அவரது ஆதரவளர்கள் […]
பிரேசில் : தெற்கு பிரேசிலின் கிராமடோ நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறிய ரக விமானம் விபத்தானத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்த நிலையில், 15க்கும் மேற்பட்டோர் காயமடடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து ஏற்பட்டு விமானம் பல கட்டிடங்களில் மோதியதன் காரணமாக, அந்த பகுதியில் இருந்த பல இடங்கள் சேதமும் அடைந்தது. மோதலின் போது ஏற்பட்ட தீயினால் புகையை உள்ளிழுத்து பலர் அவதிப்பட்டனர். அதுமட்டுமின்றி, பலத்த தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட இருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்ளூர் விமான நிலையத்திலிருந்து […]
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக வலைத்தளமாக விளங்குகிறது. இவ்வாறு அனைத்து வசதிகளும் நிறைந்த யூடியூப் மில்லியனுக்கு மேலான பயனர்களை கொண்டுள்ளது. வீட்டில் இருந்து கொண்டே பயனர்கள் தங்களது வீடியோக்களை அப்லோடு செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர். அரசியல், சுகாதாரம், கலாச்சாரம், சமையல் , விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் ஆபாசம் உள்ளிட்ட அனைத்திற்குகும் இந்த யூடியூப் தளத்தை மக்கள் பயன்படுத்தி […]