அறிவியல்

#BREAKING: சூரியனை நோக்கி பயணம்..! ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புதிய புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ..!

Published by
செந்தில்குமார்

சூரியனை ஆய்வு செய்தவற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை செப்டம்பர் 2-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அதன்படி, சூரியனை ஆய்வு செய்ய செப்.2ம் தேதி காலை 11.50 மணி அளவில் ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் இஸ்ரோ ஏவுகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் ஏவப்பட்ட உள்ளது.

சூரியனை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட உள்ள ஆதித்யா எல்-1 விண்கலம் 1,475 கிலோ எடை கொண்டதாகும். பூமியில் இருந்து 1.5 மில்லியன் கி.மீட்டர் தூரம் கொண்ட சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1-ல் நிலைநிறுத்தப்பட உள்ளது. மேலும், ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செப்-2ம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ள ஆதித்யா எல்-1 விண்கலத்தின் துவக்கத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. துவக்க ஒத்திகை மற்றும் வாகன உள் சோதனைகள் முடிந்த நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

மேலும், ஆதித்யா எல்-1 விண்கலத்தின் திட்டம் வெற்றி அடைந்தால், இந்த விண்கலம் மூலம் சூரிய புயல்கள்,  சூரியனில் ஏற்படும் மாற்றங்கள், ஒளிக்கோளம் மற்றும் குரோமோஸ்பியர் ஆகியவற்றை ஆய்வு செய்துதகவல்களை பெற முடியும். ஆதித்யா விண்கலத்தின் முதல்கட்ட சோதனைகள் கடந்த 2020-ம் ஆண்டே நடத்தி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

8 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

8 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

9 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

10 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

11 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

11 hours ago