Chandrayaan-3 rover [File Image]
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்ணில் பாய்ந்தது. 40 நாள் பயணத்தை மேற்கொண்ட சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து ரோவர் வாகனம் சாய்வுதளம் வாயிலாக நிலவில் தரையிறங்கிய புகைப்படம் நேற்று வெளியானது. இந்நிலையில், விக்ரம் லேண்டரில் இருந்த வெளிவந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வு பயணத்தை தொடங்கிவிட்டது.
லேண்டர் மற்றும் ரோவர் நிலவில் ஒரு நிலவு நாள் ஆயுள்காலத்தில் பலகட்ட ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. ஒரு நிலவு நாள் என்பது பூமியை பொறுத்தவரையில் 14 நாட்கள் ஆகும். இந்த 14 நாட்களும் சந்திரயான்-3 லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய இரண்டும் நிலவில் பல ஆய்வுகளை மேற்கொள்ளும்.
இன்று இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய லெண்டரில் இருந்து சாய்வு பலகை வழியே ரோவர் நிலவின் மேற்பரப்பில் இறங்கும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டது. தற்போது, ரோவர் வெளியேறுவதற்கு முன் சோலார் பேனல் மற்றும் சாய்வுதளம் திறக்கும் காட்சியை வெளியிட்டுள்ளது.
ரோவர் வெளிவதற்கு முன், சாய்வுதளம் மற்றும் சோலார் பேனலின் எவ்வாறு செயல்பட்டது என்றும், சந்திரயான்-3 திட்டத்தில் மொத்தம் 26 வரிசைப்படுத்தல் வழிமுறைகள் யு ஆர் ராவ் செயற்கைக்கோள் மையம் (யுஆர்எஸ்சி)/இஸ்ரோ, பெங்களூரில் உருவாக்கப்பட்டன என்று குறிப்பிட்டுள்ளது.
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…