ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர் அளவில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனையடுத்து, அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்படுவதாகவும் ஆங்கில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் கியூஷி பகுதியில் இருந்து 37 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகி உள்ளது. இதனால் ஜப்பானின் கியூஷி உள்ளிட்ட நகரங்கள் அதிர்வுகளை உணர்ந்தன. திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணத்தால் மக்கள் […]
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த நாளை எதிர்நோக்கி அமெரிக்கா வாழ் இந்தியர்களும், அமெரிக்காவில் குடியேற விரும்பும் இந்தியர்களும் சற்று கலக்கத்தில் உள்ளனர் என பல்வேறு தனியார் செய்தி நிறுவனங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் முன்வைத்த முக்கிய வாக்குறுதியை இனி அமெரிக்க வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதும், அமெரிக்க […]
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. சொல்லப்போனால், அமெரிக்காவின் முக்கிய தலைகள் தங்கியிருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் சாம்பலாகி வருகிறது. லாஸ்ஏஞ்செல்சில் பற்றி எரிந்து வரும் தீக்கு நேற்று வரை 16 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில் மேலும் 8 பேர் உடல் கருகி பலியாகி இருப்பதால் உயிரிழப்பு அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் பலர் காணவில்லை என்றும் அந்தத் […]
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள பெண்கல்வி குறித்த மாநாடு என்பதால் இஸ்லாமிய நாடுகள் பலவற்றிற்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பெரும்பாலான நாடுகள் பங்கேற்ற நிலையில், இந்த மாநாட்டில் முக்கியமாக பங்கேற்க வேண்டிய ஆப்கானிஸ்தான் மாநாட்டை புறக்கணித்துள்ளது. ஆபாகனிஸ்தானை ஆளும் தாலிபான்களுக்கு நாங்கள் அழைப்பு விடுத்தோம் ஆனால் அந்நாட்டு அரசு பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அந்நாட்டில் மற்ற […]
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல் அதற்குள் கார் செல்வதால் தடுமாறும் நிலையோ, அதிக சஸ்பென்ஷன் திறன் இருந்தாலும் அந்த மேடு பள்ள தடைகளை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். இதனை கருத்தில் கொண்டு, சீனா கார் தயாரிப்பு நிறுவனமான BYD நிறுவனம் புதிய கார் ஒன்றை தயாரித்துள்ளது. Yangwang U9 எனும் பெயரிடப்பட்ட இந்த மாடலின் சிறப்பம்சம் என்னவென்றால், காரில் சென்று […]
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். இந்த சூழலில், தற்போதைய அதிபராக இருக்கும் ஜோ பைடன் USA Today எனும் அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசியபோது “அமெரிக்க அதிபர் தேர்தலில் 2வது முறை போட்டியிட்டிருந்தால் டிரம்பை தோற்கடித்திருப்பேன்” என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்த அளவுக்கு இவர் உறுதியுடன் இதை கூறியதற்கு காரணமே ஏற்கனவே, ஜோ பைடன் டிரம்ப்பை வீழ்த்தி அதிபராக […]
அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின என ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளை வெளியிட்டு வருகிறது. கலிபோர்னியாவில் அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த மழையால் நிலங்கள் மிகவும் உலர்ந்துள்ளன. இந்த உலர்ந்த நிலைகள், தாவரங்கள் மற்றும் காடுகள் எளிதில் தீ விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஒரு இடத்தில் தீ பற்றியவுடன் மற்ற இடங்களுக்கு பரவ அங்கு ஏற்பட்ட காற்றே முக்கிய காரணமாகவும் […]
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி பரிவர்த்தனைகளில் மறைத்தாகவும் டிரம்ப் மீது நியூ யார்க் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், நியூ யார்க் நீதிமன்றம் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என அறிவித்தது. நியூ யார்க் நீதிமன்ற நீதிபதி எலன் கெஸ்மர், நடிகைக்கு பணம் கொடுத்ததை மறைத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என்றும் இதற்கான தீர்ப்பு ஜனவரி 10-ல் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். […]
நேபாளம் : மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஜனவரி 7, 2025 அன்று காலை 6:35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், நேபாளத்தின் லாபுசே நகரிலிருந்து 93 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. திடீரென நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் நேபாளத்தின் காத்மாண்டு நகரில் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவின் டெல்லி, பீகார், அசாம் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டன […]
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர் அளவுகோளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில், 93 கிலோமீட்டர் தொலைவில் ஏற்ப்பட்ட காரணத்தால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலநடுக்கத்தால் இந்தியா, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளில் பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. தற்பொழுது, நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95ஆக அதிகரித்தூள்ளது. மேலும் 130 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் நேபாளம், திபெத் பகுதிகளில் சேதமடைந்த […]
டோக்கியோ: திபெத், நேபாளத்தை தொடர்ந்து, ஜப்பானிலும் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு ஜப்பானில் உள்ள டோரிஷிமா தீவுப் பகுதியில் இன்று 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்நாட்டு உள்ளார் நேரப்படி மாலை 5:32 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், டோரிஷிமா தீவுகளின் அருகிலுள்ள கடலில் உணரப்பட்டுள்ளது. ஜப்பானிய நில அதிர்வு அளவு 7 இல் 2 ஆக இருந்தது என்று ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (ஜேஎம்ஏ) […]
நேபாளம்: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இமயமலையின் அடிவாரத்தில் உள்ள நேபாளம் – திபெத் எல்லையில், இன்று (ஜன.7) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இன்று காலை நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவாகி இருந்தது. ஏற்கெனவே, நிலநடுக்கம் ஏற்பட்ட அதே இடத்தில் மீண்டும் நில அதிர்வு ரிக்டரில் 4.5ஆக பதிவாகியுள்ளது. அதன்படி, […]
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் நேபாளத்தில் பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 எனப் பதிவாகியிருக்கிறது. நேபாள-திபெத் எல்லைக்கு அருகில் உள்ள லோபூச்சிக்கு வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் நிகழ்ந்திருக்கிறது என யுனைடெட் ஸ்டேட்ஸ் ஜியோலாஜிக்கல் சர்வே அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பீகார், அஸ்ஸாம் உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டிருக்கிறது. நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியே […]
நேபாளம் : நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று ஜனவரி 7, 2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் 6.35 மணிக்கு ஏற்பட்டது. லாபுசே நகரத்திலிருந்து 93 கிலோமீட்டர் தொலைவில் ஏற்ப்பட்ட காரணத்தால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியே சாலையில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் அந்த இடத்தில் உள்ள கட்டடங்கள் குலுங்கின, ஆனால் இதுவரை பொருட் சேதம் அல்லது உயிரிழப்பு தொடர்பாக எந்தவொரு […]
ஒட்டாவோ : கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வேதனையுடன் அறிவித்துள்ளார். ஜஸ்டின் ட்ரூடோ 2013 ஆம் ஆண்டு கனடா லிபரல் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். அந்த நேரத்தில், லிபரல் கட்சி மிகுந்த சிக்கல்களில் சிக்கியிருந்தது. 2011 ஆம் ஆண்டு, லிபரல் கட்சி ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் (House of Commons) தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது, மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவு அதிகமாகக் குறைந்திருந்தது. அதனை […]
நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் அமெரிக்க அரசிடம் புகார் அளித்து இருந்தனர். இறுதியாக நியூ யார்க் மாகாணம் ஓசோன் பகுதி பூங்காவில் 2024, அக்டோபர் 22ஆம் தேதியன்று அவர் காணப்பட்டார் என கூறப்பட்டது. இதனை அடுத்து, அமெரிக்க FBI தீவிர சோதனை மேற்கொண்டது. அதில், நியூ ஜெர்சி மாகாணத்தில் மான்செஸ்டர் […]
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்த வழக்கில் சிக்கியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு டிரம்ப் அவருக்கு பணம் வழங்கியதாக கூறப்படுகிறது. கடந்த 2006 ஆம் ஆண்டு டிரம்ப் தன்னை ரெனோ, நெவாடாவில் உள்ள ஒரு ஹோட்டல் அறைக்கு அழைத்தார் எனவும், தன்னுடன் இருந்தால் டிரம்ப் தனது தொலைக்காட்சி […]
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து இம்மாதம் அவர் அதிபராக பதவி ஏற்க உள்ளார். அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது . அதற்கிடையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் (அந்நாட்டு எம்பிகள்) உறுப்பினர்கள் பதவியேற்று வருகின்றனர். நேற்று (ஜனவரி 3) அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இருந்து 6 இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர்கள், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் பதவி ஏற்றனர். […]
அமெரிக்கா: ஹே சிரி… இதை செய், ஹே சிரி… அதை செய்… என சொல்லலும் ஆப்பிள் சொந்தகாரர்கள் அந்த சாதனத்தில் இருக்கும் டிஜிட்டல் அசிஸ்டன்ட் என்று சொல்லப்படும் ‘ஹே சிரி’-க்கு அடிமையானவர்களுக்கு இது ஒரு கேட்ட செய்தி என்றே சொல்ல வேண்டும். அதாவது, ஆண்ட்ராய்டு போன்களில் இருக்கும் ‘ஹே கூகுளை’ போல், ஆப்பிள் போன்களில் ‘ஹே சிரி’ (Siri) என்ற தனிப்பட்ட அம்சம் உள்ளது. இது நாம் என்ன கேட்கிறோமோ அதற்கு விளக்கம் கொடுக்கும். இந்த நிலையில், […]