தோள்களில் தூக்கிச் சென்றதற்கு விருது.! தருணத்தை பகிர்ந்த மாஸ்டர் பிளாஸ்டர்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • பெர்லினில் நடைபெற்ற விழாவில் சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த 20 ஆண்டுகளில் சிறந்த தருணம் என்ற தலைப்பின் கீழ் லாரியஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான விருது வழங்கும் விழா பெர்லினில் நடைபெற்றது. இதில் சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த 20 ஆண்டுகளில் சிறந்த தருணம் என்ற தலைப்பின் கீழ் லாரியஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.தோனி தலைமையில் 2011 உலகக்கோப்பையை வென்றபோது தன் கடைசி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றதற்காக கோப்பையை வென்ற இந்திய அணியின் சக வீரர்கள் சச்சினை தோளில் தூக்கிகொண்டு மைதானம் முழுக்க சுற்றிய போது மொத்த மைதானமும் சச்சின், என முழுக்கமிட்டனர். இந்நிலையில், தோள்களில் தூக்கிச் சென்ற சிறந்த தருணத்தை வைத்தே சச்சின் இந்த லாரியஸ் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார். இந்த விருதுப் பட்டியலில் இருந்த 20 பேரில் பொதுமக்கள் சச்சினுக்கு அதிகளவில் வாக்களித்திருந்தனர்.

மேலும் கால்பந்து வீரர் மெஸ்சி, கார்பந்தய வீரர் ஹாமில்டன் ஆகியோருக்கும் இதே விழாவில் விருது வழங்கப்பட்டுள்ளது. விருதை பெற்ற சச்சின் பேசுகையில், உலகக்கோப்பையை வென்ற தருணத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது அது ரொம்ப கடினம். வாழ்க்கையில் இதைவிட வேறு என்ன இருக்க முடியும் என்றும், மிகவும் அரிதாகவே நாடே ஒன்றைக் கொண்டாடுகிறது என்றால் அது வியக்கத்தக்க தருணம் என்று தெரிவித்தார். இதையடுத்து  விளையாட்டு எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை நினைவுபடுத்திக்கிறது. இது நம் வாழ்க்கையில் என்ன மாதிரியான மேஜிக்கை நிகழ்த்தி விடுகிறது என்றும், இப்போது கூட அதைப்பார்த்தால் அந்தத் தருணம் மீண்டும் நான் வாழும் தருணமாகவே உள்ளது என நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

18 minutes ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

38 minutes ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

1 hour ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

2 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

3 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

3 hours ago