Ballon d’Or 2021: “பாலன் டி’ஓர்” விருது யாருக்கு..? இன்று அறிவிப்பு..!

Published by
murugan

இன்று இரவு 1 அளவில் “பாலன் டி’ஓர்”  Ballon d’Or 2021 விருது விழா பிரான்சின் பாரிஸில் உள்ள தியேட்டர் டு சாட்லெட்டில் நடைபெறவுள்ளது.

Ballon d’Or 2021 என்பது மிக முக்கியமான மற்றும் மதிப்புமிக்க கால்பந்து விருது விழாக்களில் ஒன்றாகும். இதில் சிறந்த ஆண்கள் மற்றும் பெண்கள் வீராங்கனைகளுக்கு விருது வழங்கப்படும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “பாலன் டி’ஓர்”  Ballon d’Or 2021 விழா பிரெஞ்ச் கால்பந்து கூட்டமைப்பால் (FFF) ஏற்பாடு செய்யப்படும். இதில் உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆண்கள் மற்றும் பெண்கள் கால்பந்து வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக “பாலன் டி’ஓர்” விழா ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று இரவு 1 அளவில் “பாலன் டி’ஓர்”  Ballon d’Or 2021 விருது விழா பிரான்சின் பாரிஸில் உள்ள தியேட்டர் டு சாட்லெட்டில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் ஆண்களுக்கான பலோன் டி’ஓர், பெண்களுக்கான கோபா டிராபி (21 வயதுக்குட்பட்ட சிறந்த வீரர்) மற்றும் யாஷின் டிராபி (சிறந்த கோல்கீப்பர்) ஆகிய விருதுகள் அறிவிக்கப்படவுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான “பாலன் டி’ஓர்” விருதுகளுக்கான 30 பேர் கொண்ட பட்டியலை பிரான்ஸ் கால்பந்து வெளியிட்டுள்ளது. அதில்  லியோனல் மெஸ்ஸி பெயரும் இடம்பெற்றுள்ளது.

கடைசியாக 2019-ஆம் நடைபெற்ற விழாவில், அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி “பலோன் டி’ஓர்” விருதைப் பெற்றார். கால்பந்து உலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி, இந்த ஆண்டு பார்சிலோனா கிளப்பில் இருந்து பிரிந்தபோது ​​மில்லியன் கணக்கான ரசிகர்களின் இதயங்கள் உடைந்தன. தனது 20 ஆண்டுகால வாழ்க்கையில் பார்சிலோனாவுக்காக மட்டுமே விளையாடிய மெஸ்ஸி, தற்போது பாரிஸ் செயிண்ட்- ஜெர்மெய்ன் அணிக்காக விளையாடி வருகிறார்.

கடந்த 2000ம் ஆண்டில் பார்சிலோனா அணியில் இணைந்த மெஸ்ஸி 6 முறை பலோன் டி’ஓர் விருதையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

30 minutes ago

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…

1 hour ago

ராயல் சல்யூட் : பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்.!

ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…

2 hours ago

போர் பதற்றம்., நேரடி தகவல்கள் வேண்டவே வேண்டாம்! பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…

3 hours ago

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…

3 hours ago

ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்!

டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…

4 hours ago